முக்கூடற்பள்ளு
ஆற்று வெள்ளம் நாளை வரத்
தோற்று தேகுறி- மலை
யாள மின்னல் ஈழமின்னல்
சூழமின்னுதே
நேற்று மின்றுங் கொம்புசுற்றிக்
காற்ற டிக்குதே-கேணி
நீர்ப்படு சொறித்த வளை
கூப்பிடு குதே
சேற்று நண்டு சேற்றில்வளை
ஏற்றடைக்கு தே-மழை
தேடியொரு கோடி வானம்
பாடி யாடுதே
போற்று திரு மாலழகர்க்
கேற்ற மாம்பண்ணைச்--சேரிப்
புள்ளிப் பள்ளர் ஆடிப்பாடித்
துள்ளிக் கொள்வோமே.
விளக்கம்
- நாளை ஆற்றில்
வெள்ளம்
வருவதற்கு
உரிய அறிகுறிகள் தோன்றுகின்றன.
- தென்மேற்குத்
திசையில்
மலையாள
மின்னலும்,
தென்கிழக்குத் திசையில் ஈழத்து மின்னலும்,
சூழ வளைத்து மின்னுகின்றன;
- நேற்றும்
இன்றும்
மரக்கொம்புகளை, பூங்கொம்புகளை
வட்டமாகச்
சுழற்றிச்
சுழற்றிக்
காற்று
அடிக்கின்றது;
- கிணற்று
நீரிலே
இருக்கின்ற கசொறித்தவளைகள்
கூப்பிடுகின்றன;
சேற்றிலே
வாழும்
நண்டுகள்
தம் வளைகளுக்குள்
மழைநீர்
புகுந்து விடாதபடி சேற்றினால்
வளை வாயில்களை அடைக்கின்றன;
- நீர்த்துளியை
உண்ண ஒரு கோடி வானம்பாடிப்
பறவைகள்
ஒரு மழையைத்
தேடிப்
பாடி ஆடுகின்றன;
- உலகமெல்லாம் போற்றும் திருமாலாகிய அழகருக்குப் பெரியபபண்ணையைச் சேர்ந்த சேரியிலுள்ள பள்ளர் வகையினரெல்லாம் மழையினை வரவேற்று ஆடிப்பாடித் துள்ளிக் கொள்வோம் வாருங்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக