கால் கடுக்குது கை கடுக்குது
கைத்த வழிப்பயணம்! –இது
கைத்த வழிப்பயணம் !
மேல் கடுக்குது வெயில் முடுக்குது
வெற்று வழிப்பயணம் ! –இது
சுற்று வழிப்பயணம் !
பள்ள மிருக்குது பாதை சறுக்குது
பார வழிப்பயணம் ! – இது
பார வழிப்பயணம் !
உள்ள மிருக்குது துள்ளி நடந்திட
ஒற்றை வழிப்பயணம் ! – இது
ஒற்றை வழிப்பயணம் !
தேகம் நடுங்குது வேகம் ஒடுங்குது
தேச வழிப்பயணம் !- இது
தேச வழிப்பயணம்!
காகம் இறங்குது கழுகு சுற்றுது
காட்டு வழிப்பயணம்! –இது
காட்டு வழிப்பயணம் !
நேரம் கிடக்குது தூரம் கிடக்குது
நீண்ட வழிப்பயணம் ! –இது
நீண்ட வழிப்பயணம்!
பாரம் நெருக்குது பாதை சறுக்குது
கெட்ட வழிப்பயணம்! –இது
கெட்ட வழிப்பயணம்!
போது குறுகுது போதை பெருகுது
போகும் வழிப்பயம்! –உயிர்
போகும் வழிப்பயம் !
வாது பெருகுது வம்பு வருகுது
வாழ்க்கை வழிப்பயணம்! - இது
வாழ்க்கை வழிப்பயணம் !
பாடலின் பொருள்
கவிஞர்
தமிழ்ஒளியின் வழிப்பயணம் என்ற கவிதை வாழ்க்கையின் பல்வேறு நிலைகளை விளக்குகின்றது.
நிலையற்ற
வாழ்க்கை
மனிதனின்
வாழ்க்கை நிலையில்லாதது. அவன் கொண்ட ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் நிலையில்லாதது. வாழ்க்கை
என்ற பயணத்தைத் தொடர்கின்ற மனிதன் தன் பயணத்தில் பல்வேறு பரிமாணங்களை அடைகின்றான்.
தொல்லைவழிப்பயணம்
பிறந்தது
முதல் இறக்கின்ற வரை ஆசைகளையும், எதிர்பார்ப்புகளையும் சுமந்து கொண்டே இருப்பதால் வாழ்க்கை
தொல்லைவழிப் பயணமாக அமைகின்றது.
நைந்த
வழிப்பயணம்
எதிர்பார்ப்புகளைப்
பூர்த்தி செய்து கொள்ள முயற்சி செய்து கொண்டே இருப்பதால் மனம் துன்பமடைகின்றது. அதனால்
நைந்த வழிப்பயணமாக அமைகின்றது.
கைத்த
வழிப்பயணம்
கால்களும்,
கைகளும் ஓயாமல் உழைத்துக் கொண்டே இருந்தாலும், விரும்பியதை அடைய முடியாமல் போகும்போது
வாழ்க்கை வெறுப்பாகின்றது. அதனால் கைத்த வழிப்பயணமாக அமைகின்றது. (கைத்த என்றால் அலைச்சல்
என்று பொருள்)
வெற்று
வழிப்பயணம்
வெயில்,
மழை என காலங்கள் மாறி மாறிச் சுழன்றாலும் போகின்ற இடம் எது என்று தெரியாமல் ஓடிக்கொண்டே
இருப்பதால் அப்பயணம் வெற்று வழிப்பயணமாக அமைகின்றது.
பாரவழிப்பயணம்
சமூகத்தின்
ஏற்றத்தாழ்வுகளால் விரும்பியதை அடைய முடியாத சூழல் உருவாகின்றது. சாண் ஏறினால் முழம்
சறுக்கும் என்ற பழமொழிக்கேற்ப ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த வாழ்க்கையாக அமைவதால் இது பாரவழிப்
பயணமாக இருக்கின்றது.
ஒற்றைவழிப்பயணம்
எத்தகைய
துன்பங்கள் வந்தாலும், பல சோதனைகளைக் கடந்தாலும் இன்னும் செல்வோம் என்ற நம்பிக்கையின்
வழிகளில் பயணத்தைத் தொடர மனம் விரும்புகின்றது. போனால் திரும்பி வர முடியாது என்று
தெரிந்திருந்தும் அப்பயணத்தை விரும்புவதால் இது ஒற்றை வழிப்பயணம் என்பதை நினைவூட்டுகின்றார் கவிஞர்.
தேசவழிப்பயணம்
நோய்களும்
முதுமையும் வாழ்க்கைப் பயணத்திற்குத் தடையாக அமைவதால் இறைவனின் தேசத்தை விரும்பி ஏற்கின்ற
தேசவழிப் பயணமாக அமைகின்றது.
காட்டுவழிப்பயணம்
இளமையில்
செய்த குற்றங்களையும், பாவங்களையும் முதுமையில் எண்ணிப் பார்ப்பதால் குற்ற உணர்ச்சிகளால்
ஆட்படுகின்றோம். எனவே, அப்பயணம் காட்டுவழிப் பயணம்போல் அமைகின்றது. “காகம் இறங்குது
கழுகு சுற்றுது” என்ற வரிகள் நாம் செய்த குற்றங்கள், பாவங்களின் குறியீடாகும்.
நீண்ட
வழிப்பயணம்
நாம்
எத்தனை காலம் வாழ்வோம் என்பது நம்மைப் படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரியும். ஆகவே நமக்குத்
தெரியாத பயணத்தை நாம் மேற்கொண்டிருப்பதால் இது நீண்ட வழிப்பயணமாக இருக்கின்றது.
கெட்ட
வழிப்பயணம்
குடும்பத்தின்
கடமைகளால் நெருக்கப்படும்போதும், கடமைகளை நிறைவேற்றப் போராடும்போதும் தடங்கல்கள் பல
ஏற்படுகின்றன. அதனால் மனம் சோர்வுறும்போது கெட்டவழிப்பயணமாகத் தெரிகின்றது.
உயிர்ப்பயம்
வாழ்நாள்
குறுகும்போது மனம் அச்சம் கொள்கிறது. அந்த அச்சத்தின் போதை பெருகப் பெருக மரணத்தை எதிர்பார்த்து
வாழும் பயம் ஏற்படுகின்றது. (போது என்பதற்கு வாழ்நாள் என்று பொருள்)
வாழ்க்கை
வழிப்பயணம்
வாழ்நாளின்
இறுதிப் பயணத்தை எதிர்பார்த்து இருக்கும்போது உடலும் மனமும் சண்டையிட்டுக் கொள்கின்றன.
அதனால் நம் மனதில் நியாய தர்மங்களின் விவாதங்கள் தொடர்கின்றன. இதுவே வாழ்க்கை வழிப்பயணம்
என்று குறிப்பிடுகின்றார் கவிஞர்.
Completed mam
பதிலளிநீக்கு