தமிழ் எழுத்துகள்
1. தமிழ் மொழியில் உள்ள மொத்த எழுத்துகள் 247. அவை,
உயிர் எழுத்துகள் - 12
மெய் எழுத்துகள் - 18
உயிர் மெய் எழுத்துகள் - 216
ஆய்த எழுத்து - 1
2. முதல் எழுத்துகள் (primary letters)
உயிர் எழுத்து 12,
மெய் எழுத்து 18.
3. உயிர் எழுத்துகள் - 12
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ
4. உயிர் எழுத்துகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை,
1. குறில் - அ, இ, உ, எ, ஒ ( 5 )
2. நெடில் - ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ( 7)
5. சுட்டு எழுத்துகள் - 3
அ, இ, உ
6. வினா எழுத்துகள் - 4
ஆ, எ, ஏ, ஓ
7. மெய் எழுத்துகள் - 18
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
8. மெய் எழுத்துகளை 3 வகையாகப் பிரிக்கலாம். அவை,
1. வல்லினம் - க், ச், ட், த், ப், ற்
2. மெல்லினம் - ங், ஞ், ண், ந், ம், ன்
3. இடையினம் - ய், ர், ல், வ், ழ், ள்
9. ஆய்த எழுத்து - 1
ஃ
10. தமிழ் எழுத்துகளை எழுதத் துணை புரியும் குறியீடுகள்
ா - துணைக்கால்
ி - மேல் கீழ் நோக்கும் சுழி
ீ - மேல் நோக்கும் சுழி
பெ - ஒற்றைக் கொம்பு
பே - இரட்டைக் கொம்பு
பை - ஐகாரக் கொம்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக