திருநாவுக்கரசர் தேவாரம்
நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி
லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே
எந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரனற்
சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே
வடியிணையே குறுகி னோமே.
விளக்கம்
மலர் போன்ற சிவபெருமானின் திருவடிகளை
அடைக்கலமாக அடைந்தமையால், நாம் யாருக்கும் அடிமையாவதில்லை. மரணத்தைத் தருகின்ற இயமனுக்கு
அஞ்சுவதில்லை. நரகத்தில் புகுந்து துன்பமடைவதில்லை. பொய்யும் புரட்டும் இனி நம்மை அணுகுவதில்லை.
என்றும் ஆனந்தமாக இருப்போம். நோய் என்பதையே அறியாது இருப்போம். வேறு யாரையும் பணிந்து
நிற்க மாட்டோம். எந்நாளும் நமக்கு இன்பமே ஏற்படும். துன்பம் என்பதை நாம் அறிய மாட்டோம்.
யாருக்கும் அடிமையாகாதவனும், வெண்குழையைக் காதில் அணிந்த அரசனாகிய ஆதி சங்கரனுக்கு
மட்டுமே நாம் அடிமையாக இருப்போம் என்று திருநாவுக்கரசர் பாடுகின்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக