ஆண்டாள் - திருப்பாவை
மார்கழித் திங்கள்
மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்!
போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச்
செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன்
நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை
இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண்
கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே, நமக்கே
பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ
ரெம்பாவாய்.
விளக்கம்
முழுநிலவு
ஒளிவீசும் நல்ல நாளான இன்று, மார்கழி மாதம் பிறந்து விட்டது. சிறந்த அழகிய ஆபரணங்களை அணிந்தவர்களே, வளம் நிறைந்த
ஆயர்பாடியின் செல்வச் சிறுமியர்களே, எழுந்திருங்கள். நாம் அனைவரும் இன்று அதிகாலையில்
நீராடச் செல்வோம். கூர்மையான
வேலாயுதத்தைக் கையில் கொண்டு போர்த்தொழிலில் வல்லவனான நந்தகோபனாரின் திருமகன். அழகிய கண்களை உடைய யசோதையின் சிங்கக்குட்டி போன்ற மகன்.
மேகங்களைப் போல கரிய மேனியும், சிவந்த கண்களையும் கொண்டவன். சூரியனைப் போன்றும், சந்திரனைப் போன்றும் ஒளி நிறைந்த முகத்தினை உடையவன்.
மேற்கூறிய தன்மைகளைக் கொண்ட நாராயணனே நமக்குப் பரம்பொருள். அவன் கட்டாயம் நமக்கு நோன்பின் பலனை அருளுவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக