பட்டினத்தார்
இவர் பெருஞ்செல்வந்தராகத் திகழ்ந்தவர். அனைத்தையும் துறந்து ஞானியானவர்.
இளமை, செல்வம் ஆகியவை நிலையில்லாதவை என்று பாடியவர். பல சித்து விளையாட்டுகளைச் செய்தவர்.
சிதம்பரம், திருச்செங்கோடு, திருவிடைமருதூர், திருக்கழுக்குன்றம், திருக்காளத்தி ஆகிய
இடங்களுக்குச் சென்று இறுதியில் திருவொற்றியூரில் சமாதியானவர்.
திருவிடைமருதூர்
பாடல்
காடே திரிந்து என்ன காற்றே புசித்து
தென்ன கந்தை சுற்றி
ஓடே எடுத்து என்ன உள்ளன்பு இலாதவர்
ஓங்கு விண்ணோர்
நாடே இடைமருதீசர்க்கு மெய் அன்பர்
நாரியர் பால்
வீடே இருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டு
இன்பம் மேவும் வரை (1)
விளக்கம்
உள்ளத்தில் ஒழுக்கம்
இல்லாமல் முற்றும் துறந்து விட்டேன் என்று பொய் பேசிக் கொண்டு காட்டில் வாழ்வதால் பயன்
இல்லை. காற்றை சுவாசித்து உயிர் வாழ்வதாலும் பயன் இல்லை. கந்தல் துணிகளை உடுத்திக்
கொண்டு, கையில் திருவோடு ஏந்தி பிறரிடம் இரந்து உண்டு வாழ்வதாலும் பயன் இல்லை. அவை
யாவும் மற்றவர்களுக்காக போடப்படும் வேஷம்தான். ஆனால் இல்லறத்தில் இருந்து மனைவி மக்களுடன்
வாழ்ந்தாலும், உள்ளத்தில் ஒழுக்கமாக இருப்பவனே இறைவனின் திருவடியை அடைவான். பேரின்பத்தைப்
பெறுவான்.
பாடல்
தாயும் பகை கொண்ட பெண்டிர் பெரும்
பகை தன்னுடைய
சேயும் பகை உறவோரும் பகை இச் செகமும்
பகை
ஆயும் பொழுதில் அருஞ்செல்வம் நீங்கில்
இங்கு ஆதலினால்
தோயும் நெஞ்சே மருதீசர் பொன் பாதஞ்
சுதந்தரமே (2)
விளக்கம்
வாழ்வதற்குரிய
செல்வங்கள் நம்மை விட்டு நீங்கி விட்டால் பெற்ற தாயும் நமக்குப் பகையாவார். நம் வாழ்வின்
பாதியாக விளங்கும் மனைவியும் பகையாவார். நம் மூலமாக இந்த உலகிற்கு வந்த பி்ள்ளைகளும்
பகையாவார். உற்றார் உறவினர் அனைவரும் பகையாவர். இவர்கள் அனைவரும் நம்மை விட்டு நீங்கினாலும்
சிவபெருமானின் பொன்னடிகளைப் போற்றிக் கொண்டே இருந்தால், அவரின் திருவடி நமக்கு எப்போதும்
துணையாக இருக்கும். என் நெஞ்சே! அவருடைய திருவடிகளில் அன்பு செலுத்து. அதுவே உனக்கு
இந்த உலகத்தின் ஆசைகளில் இருந்து விடுதலை தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக