ஈர் ஒற்று வரும் இடங்கள்
இரண்டு மெய் எழுத்துகள் சேர்ந்து
வருவதை ஈர்ஒற்று மயக்கம் என்று கூறுவர்.
சான்று - புகழ்ச்சி (இதில் ‘ழ்’ என்னும்
மெய் எழுத்துக்குப் பின் ‘ச்’ என்ற மெய் எழுத்து வந்துள்ளது)
ஈர்ஒற்று மயக்கம் வரும் இடங்கள்:
ய், ர், ழ் என்னும் மூன்று மெய் எழுத்துகளை
அடுத்து, க், ங், ச், ஞ், த், ந், ப், ம் ஆகிய மெய் எழுத்துகள் ஈர்ஒற்றுகளாகச் சேர்ந்து
வரும்.
‘ய்’ என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று
வருதல்
சான்று – காய்ச்சல், மெய்ஞ்ஞானம்,
மேய்த்தல், வாய்ப்பு
‘ர்’ என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று
வருதல்
சான்று – பார்க்கிறாள், உயர்ச்சி,
பார்த்தல்,
‘ழ்’ என்னும் எழுத்துடன் ஈர்ஒற்று
வருதல்
சான்று – வாழ்க்கை, வாழ்த்து, வாழ்ந்து,
தாழ்ப்பாள்
அது, அஃது வரும் இடங்கள்
அது என்ற சொல்லுக்கும், அஃது என்ற சொல்லுக்கும் பொருளில் வேறுபாடு கிடையாது.
அது – உயிர்மெய் எழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன்னே வரும்.
சான்று: அது புலி, அது
வண்டி, அது மாட்டு வண்டி.
அஃது – உயிர் எழுத்தை முதலாகக் கொண்டு
தொடங்கும் சொல்லின் முன்னே வரும்.
சான்று: அஃது இல்லை, அஃது ஆமை, அஃது ஏணி
ஒரு, ஓர் வரும் இடங்கள்
ஒரு – உயிர்மெய் எழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன்னே வரும்.
சான்று: ஒரு வீடு, ஒரு சிங்கம்
ஓர் – உயிர் எழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன்னே வரும்.
சான்று: ஓர் ஆசிரியர், ஓர் ஆடு.
தான்
தாம் வரும் இடங்கள்
தான் என்பது ஒருமையைக் குறிக்கும். தாம் என்பது பன்மையைக் குறிக்கும்.
தான்,
தன்னை, தன்னால், தனக்கு, தனது ஆகியவற்றை ஒருமைத் தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.
சான்று - மாணவன் தனது கையால் பெற்றுக்
கொண்டான்.
சான்று - கன்று தனது தலையை ஆட்டியது.
தாம்,
தம்மை, தம்மால், தமக்கு, தமது ஆகியவற்றைப் பன்மைத் தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.
சான்று - தலைவர் தமது கையால் பரிசு
வழங்கினார்.
சான்று - மாடுகள் தமது தலையை ஆட்டின.
நன்றி
https://theenthamizhchaaral.wordpress.com/2016/09/11/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-9/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக