அபிராமி அந்தாதி
கலையாத
கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வாராத
நட்பும்
கன்றாத
வளமையுங் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத
உடலும்
சலியாத
மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத
சந்தானமும்
தாழாத
கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள்
வாராத கொடையும்
தொலையாத
நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பமில்லாத
வாழ்வும்
துய்ய
நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய
தொண்டரொடு
கூட்டு கண்டாய்
அலையாழி
அறிதுயிலு மாயனது தங்கையே!
ஆதிகட
வூரின் வாழ்வே!
விளக்கம்
இந்த உலகத்தில் நாம் மகிழ்ச்சியுடன் வாழ பதினாறு செல்வங்கள் தேவை. அவை,
அறிவைத் தருகின்ற கல்வி,
நீண்ட ஆயுள்,
உண்மையான நண்பர்கள்,
நிறைந்த செல்வங்கள்,
முதுமையிலும் இளமையுடன் திகழக்கூடிய உடல் நலம்,
நோயற்ற உடல்,
சோர்வின்றி இயங்குகின்ற மனம்,
அன்பைப் பொழிகின்ற மனைவி,
மதிப்பும் மரியாதையும் தருகின்ற குழந்தைகள்,
என்றும் குறையாத புகழ்,
வாக்கு மாறாதிருத்தல்,
பிறருக்கு உதவி செய்யத் தடையில்லாத செல்வ நிலை,
அழியாத செல்வங்கள்,
நீதி தவறாத ஆட்சி,
துன்பம் இல்லாத வாழ்க்கை,
அபிராமியின் திருவடியின் மீது அன்பு
இவற்றோடு அடியவர்களின் நட்பு ஆகியனவாகும். இவை அனைத்தும் குறைவில்லாமல் தருபவள்
அன்னை அபிராமி. அவள் அலைகள் வீசுகின்ற கடலில்
துயில் கொண்டிருக்கும் திருமாலின் தங்கை. திருக்கடவூரில் கோயில் கொண்டிருக்கும் தெய்வம்.
சிவபெருமானின் ஒரு பாகத்தை விட்டு நீங்காதிருக்கும் பேறு பெற்றவள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக