காளமேகப்புலவர்
ஆமணக்கும் யானைக்கும் சிலேடை
பாடல்
முத்திருக்கும் கொம்பசைக்கும் மூரித்தண்டு ஏந்திவரும்
கொத்திருக்கும் நேரே குலைசாய்க்கும் – எத்திசைக்கும்
தேமணக்கும் சோலைத் திருமலைராயன் வரையில்
ஆமணக்கு மால்யானை யாம்.
விளக்கம்
எல்லாப் பக்கங்களிலும் மணம்வீசும் சோலைகளை மிகுதியாக உடையது திருமலைராயனது மலை.
ஆமணக்கு
முத்துக்களாகிய விதைகளைத் தன்னிடத்துப் பெற்றிருக்கும். கிளைகளை அசைத்துக் கொண்டே
நிற்கும். முதிர்வுற்ற தண்டைத் தாங்கி வளர்ந்து வரும். லிங்கத்தைப் போன்ற காய்களைக்
கொத்துக் கொத்தாகப் பெற்றிருக்கும். எதிர் நின்று காண்பவர்களைக் கவருகின்ற குலைகளைச்
சாய்த்துக் கொண்டிருக்கும்.
யானை
நல் ஒளி வீசும் முத்துக்களை நெற்றியில் பெற்றிருக்கும். தனது கொம்பாகிய தந்தங்களை அசைத்துக் கொண்டே இருக்கும். வன்மையான கட்டைகளை மிகவும் எளிமையாக துதிக்கையால் தூக்கி வந்து கொண்டே இருக்கும். பாகர்கள் அங்குசத்தால் குத்திய வடுக்கள் காணப்படும். மலையில் உள்ள வாழைக் குலைகளை முறித்துப் பூமியிலே விழும்படி அடித்து உண்ணும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக