பண்டைத் தமிழகத்தின் விளையாட்டுகள்
ஒரு நாட்டின் பண்பாட்டு வரலாற்றில் விளையாட்டுகளும் பொழுது போக்கும் முக்கியமானவையாகும். பண்டைய தமிழகத்து மக்களின் விளையாட்டுகளைப் பின்வருமாறு காணலாம்.
குழந்தைகள் விளையாட்டு
- குழந்தைகள் மணல் வீடு கட்டி விளையாடினர்.
- முச்சக்கரத் தேர் ஓட்டுவர்.
- பொம்மை வைத்தாடுதல், மடுவில் குதித்து மூழ்கி மண் எடுத்து விளையாடுதல் போன்ற விளையாட்டுகளை விளையாடினர்.
- குழந்தைகளுக்கு அம்புலி காட்டி விளையாடுவதுமுண்டு.
- பவழப் பலகைமேல் இரு யானைப் பொம்மைகள் ஒன்று மற்றொன்றைக் குத்துவதைப்போல செதுக்கப் பொருத்தி வைத்து விளையாடினர் என்பதைக் குறுந்தொகை 61ஆவது பாடல் காட்டுகின்றது.
சாதாரண மக்களின் விளையாட்டு
- கட்டங்கள் அமைத்து, வட்டாடுவதையும், கால் பந்தாட்டத்தையும் சாதாரண மக்கள் விளையாடினர்.
- ஆடவரும் பெண்டிரும் ஆறுகளிலும் குளங்களிலும் புனலாடி மகிழ்ந்துள்ளனர்.
ஆண்களின் விளையாட்டுகள்
- உடலை ஆற்றுலுடையதாக வளர்த்து மற்போர் செய்வது ஒரு விளையாட்டு அதைக் கண்டு களிப்பது பொழுது போக்காகியது.
- விலங்குகளைக் கருவியாகக் கொண்டு நடத்தப்படும் போட்டிகளான கடாப்போர், கோழிப்போர், ஏறுதழுவல் ஆகிய விளையாட்டுகள் ஆண்களின் விளையாட்டில் முக்கியத்துவம் பெற்றன.
- மன்னர்களுக்கு வேட்டையாடுதல் பொழுதுபோக்காக இருந்துள்ளது.
பெண்களின் விளையாட்டுகள்
- பந்துகளைக் கொண்டு கழங்காடுதல் பெண்களின் விளையாட்டாகும்.
- பாவைகளை வைத்தாடும் ஓரை என்ற விளையாட்டு முக்கியப் பொழுது போக்காகும்.
- மணற்பாவை வனைந்து விளையாடினர். இது வண்டலிழைத்தல் எனப்பட்டது.
- தண்ணீரில் பாய்ந்து நீராடி விளையாடுவதுண்டு.
- அம்மானை, ஊசல் ஆகியனவும் பெண்களின் விளையாட்டுகளாகும்.
- விளையாடும்போது வரிப்பாட்டுபாடுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக