திருவாய்மொழி
நம்மாழ்வார்
நம்மாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய
பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர்.
இவர் தமிழ்நாட்டில் தூத்துக்குடி
மாவட்டம் ஆழ்வார்
திருநகரியில் காரியார்
மற்றும் உடைய நங்கைக்குத் திரு மகனாகப் பிறந்தவர். இவர் பிறந்த உடன் அழுதல், பால்
உண்ணுதல் முதலியனவற்றைச் செய்யாமல் உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால் அவரை
"மாறன்" என்றே அழைத்தனர். மாயையை உருவாக்கும் "சட" எனும்
நாடியினாலே குழந்தைகள் பிறந்தவுடன் அழுகிறது. ஆனால் இவர் சட நாடியை வென்றதால்
"சடகோபன்" என்றும் அழைக்கப்பட்டார். யானையை அடக்கும் அங்குசம் போல, பரன்
ஆகிய திருமாலை தன் அன்பினால் கட்டியமையால் "பராங்குசன்" என்றும், தலைவியாகத் தன்னை வரித்துக் கொண்டு பாடும்போது "பராங்குச நாயகி"
என்றும் அழைக்கப்படுகிறார். நான்கு வேதங்களைத் தீந்தமிழில் பாடியதால் "வேதம் தமிழ் செய்த
மாறன்" என்றே புகழப்படுகிறார்.
பதினாறு
ஆண்டுகள் திருக்குருகூர் நம்பி கோவிலின் புளிய மரத்தின் அடியில் எவ்வித சலனமும்
இல்லாமல் தவம் செய்து வந்தார். வடதிசை யாத்திரை மேற்கொண்டிருந்த மதுரகவி என்பவர்
அயோத்தியில் இருந்தபோது தெற்குத் திசையில் ஒரு ஒளி தெரிவதைக் கண்டு அதனை அடைய
தென்திசை நோக்கிப் பயணித்தார். மாறனிடமிருந்தே அவ்வொளி வருவதை அறிந்து அவரை சிறு
கல் கொண்டு எறிந்து விழிக்க வைத்தார். சடகோபனின் ஞானத்தாலும், பக்தியாலும்
கவரப்பெற்று அவருக்கே அடிமை செய்தார் என்பது வரலாறு.
நம்மாழ்வார் இயற்றிய பாசுர நூல்கள் நான்கு. அவை,
1. திருவிருத்தம் – 100 பாசுரங்கள்
2. திருவாசிரியம் – 8 பாசுரங்கள்
3. பெரிய
திருவந்தாதி – 87 பாசுரங்கள்
4. திருவாய்மொழி –
1102 பாசுரங்கள்
நம்மாழ்வாரின்
வேறு பெயர்கள்
சடகோபன், மாறன், காரிமாறன், பராங்குசன், வேதம் தமிழ் செய்த மாறன், வகுளாபரணன், குருகைப்பிரான், குருகூர்
நம்பி, திருவாய்மொழி பெருமாள், பெருநல்துறைவன், குமரி
துறைவன், பவரோக பண்டிதன்,
ஞதனதேசிகன், ஞான பிரான், ஞானத் தமிழ்க் கடல்.
இவர் இயற்றிய திருவாய்மொழியில் நான்காம் திருமொழியிலிருந்து 5 பாடல்கள்
பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இப்பகுதி, பராங்குசன் என்றழைக்கப்படும் நம்மாழ்வார் தம்மைத்
தலைவியாகப் பாவித்து இறைவன் மீது காதல் கொண்டு, நாரை, குயில், அன்னம் முதலிவற்றைத்
தூது அனுப்புவதாகப் பாடப்பட்டுள்ளது.
நான்காந் திருமொழி
நாரை விடு தூது
அஞ்சிறைய
மடநாராய். அளியத்தாய் நீயும்நின்
அஞ்சிறைய
சேவலுமாய் ஆவாவென் றெனக்கருளி
வெஞ்சிறைப்புள்
ளுயர்த்தாற்கென் விடுதூதாய்ச் சென்றக்கால்
வன்சிறையில்
அவன்வைக்கில் வைப்புண்டா லென்செய்யுமோ?
விளக்கம்
நாரையே! என் மீது கொண்ட கருணையால், நீ உன்
ஆண் நாரையுடன் நாரணனிடம் எனக்காகத் தூது சென்றால், அவன் உங்களை அவனது சிறையில் வைத்துவிட்டால்,
என்ன செய்வாய்?
குயில் விடு தூது
என்செய்ய
தாமரைக்கண் பெருமானார்க் கென்தூதாய்
என்செய்யும்
உரைத்தக்கால் இனக்குயில்காள். நீரலிரே?
முன்செய்த
முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல்
முன்செய்ய
முயலாதேன் அகல்வதுவோ விதியினமே?
விளக்கம்
இனக் குயில்களே! தாமரைக் கண்ணனிடம் எனக்காகத்
தூது செல்லுங்கள். நான் முன் செய்த வினைப்பயனால், அவனுக்குக் குற்றேவல் செய்யும் விதி
எனக்கு இல்லாமல் போயிற்று. இனியாவது அப்பேறு எனக்குக் கிட்டுமோ என்பதை
அறிந்து வா.
அன்னம் விடு தூது
விதியினால்
பெடைமணக்கும் மென்னடைய அன்னங்காள்.
மதியினால்
குறள்மாணாய் உலகிரந்த கள்வற்கு
மதியிலேன்
வல்வி னையே மாளாதோ வென்று , ஒருத்தி
மதியெல்லாம்
முள்கலங்கி மயங்குமால் என்னீரே.
விளக்கம்
அன்னங்களே! குறள் மணியாய் (வாமன அவதாரம்) உலகை இரந்தவனிடம் சென்று, புத்தி முழுவதும்
கலங்கப் பெற்று, அறிவிழந்து கிடக்கிறாள் ஒரு பெண் என்று கூறுங்கள்.
மகன்றில் விடு தூது (கிரவுஞ்சம்)
என்நீர்மை
கண்டிரங்கி யிதுதகா தென்னாத
என்நீல
முகில்வண்ணற் கென்சொலியான் சொல்லுகேனோ
நன்னீர்மை
யினியவர் கண் தங்காதென் றொருவாய்ச்சொல்
நன்னீல
மகன்றில்காள். நல்குதிரோ நல்கீரோ?
விளக்கம்
மகன்றில்களே! என் நிலைமையைக் கண்டு இரக்கப்படாத முகில் வண்ணனுக்கு என் நிலைமையை எடுத்துச்
சொல்லுங்கள்.
குருகு விடு தூது
நல்கித்தான்
காத்தளிக்கும் பொழிலேழும் வினையேற்கே,
நல்கத்தா
னாகாதொ? நாரணனைக் கண்டக்கால்
மல்குநீர்ப்
புனற்படப்பை இரைதேர்வண் சிறுகுருகே.
மல்குநீர்க்
கண்ணேற்கோர் வாசகங்கொண் டருளாயே.
விளக்கம்
நீர் வாய்ந்த தோட்டங்களில் உலாவும் குருகே! ஏழு உலகங்களையும் காத்தளிக்கும் நாராயணன் நீர் நிறைந்த கண்களுடன் நிற்கும்
எனக்கு
அருள் தரக்கூடாதா என்று அவனிடம் சென்று கேள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக