குண்டலகேசி
பாளையாம்
தன்மை செத்தும்,
பாலனாம்
தன்மை செத்தும்,
காளையாம்
தன்மை செத்தும்,
காமுறும்
இளமை செத்தும்,
மீளும்இவ்
இயல்பும் இன்னே
மேல்வரும்
மூப்பும் ஆகி,
நாளும்நாள்
சாகின்றோமால்,
நமக்குநாம்
அழாதது என்னோ?
விளக்கம்
“தாயின் வயிற்றில் கருவாக உருவானோம். பின் பாலன் என்ற பருவம் தோன்றியது. பாலன் என்ற பருவம் இறந்து காளைப் பருவம் வந்தது. காளை என்ற பருவம் இறந்து இளமைப் பருவம் உண்டாது. இளமைப் பருவம் அழிந்து முதுமைப் பருவம் எய்தியது. இவ்வாறு ஒவ்வொரு பருவமும் இறந்துபோகும் போது நாம் அழவில்லை. ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டே இருக்கிறோம் என்று வருத்தப்படவில்லை. இறந்துபோகும்போது மட்டும் ஏன் அழவேண்டும்” என்று வாழ்வின் நிலையாமையை உணர்த்துகின்றார் ஆசிரியர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக