சனி, 12 ஜூலை, 2025

TANSCHE - பழைய கற்காலம்

 

பழைய கற்காலம்

இது மனித வாழ்வின் தொடக்க நிலையைக் குறிக்கிறது. இயற்கையாகக் கிடைத்த பதப்படுத்தாத கற்கருவிகளை வேட்டையாடுவதற்குப் பயன்படுத்திய முதல் மனிதர்களின் காலத்தைக் குறிக்கிறது.  கற்கருவிகளைப் பயன்படுத்திய பிறகே மனிதன் விலங்கில் இருந்து வேறுபட்டான். மலைத்தொடரில் வேட்டையாடி வாழ்ந்து வந்த தமிழர்களே முதல் மாந்தர்கள் ஆவர்.

சான்றுகள்

அவர்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் இப்போதைய தமிழகத்தின் மேற்கு மலைத் தொடர்ச்சியிலும், கிழக்கு மலைத் தொடர்ச்சியிலும், வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டைக்கு அருகில் உள்ள கொற்றலையாற்றுச் சமவெளியிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் பூண்டி, குடியம் ஆகிய இடங்களிலும், நெய்வேலி, வடமதுரை, சென்னையில் உள்ள பல்லாவரம் மலை போன்ற தமிழகத்தின் பல இடங்களிலும் கிடைத்துள்ளன .

கொற்றலை ஆற்றின் கரையோரத்தில் பழைய கற்கால மக்களன் பெருமளவில் வாழ்ந்துள்ளனர். மாட்டின் நீள்வடிவமான 17 காலடித் தடயங்கள், மூன்று மீட்டர் ஆழத்தில் தடம் பதிந்த தடயங்கள் போன்றவை அகழாய்வின் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. கடலில் மூழ்கியதாகக் கருதப்படும் புதுச்சேரிப் பகுதியில் ஒன்றரை இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் வாழ்ந்ததாகக் கருதப்படுகின்றது.

குடியம் என்ற ஊருக்கு அருகில் உள்ள அள்ளிக்குழி மலைத்தொடரில் பழைய கற்கால மக்கள் வாழ்ந்த 16 குகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கே கைக்கோடரிகள், இதய வடிவிலான கைக்கோடரிகள், வெட்டுக்கத்திகள், சுரண்டிகள், சிறிய வெட்டுக் கருவிகள், கூர்முனைக் கருவிகள், மரம் இழைக்கும் உளி முதலிய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்கருவிகளை நிலத்தைத் தோண்டவும், மரம் வெட்டவும், விலங்குகளைக் கொல்லவும், அதன் இறைச்சிகளைக் கிழிக்கவும், தோல் உரிக்கவும், மரப்பட்டைகளைச் சீவவும் பயன்படுத்தினர்.

முகத்தோற்றம்

கூர்மையான மூக்கு, உடல் முழுவதும் முடிகள், நீண்ட நகங்கள், நீளமான தலைமுடியுடன் இருந்தனர். அவர்களை உணவு சேகரிப்பவர்கள் என்றும், காட்டாண்டிகள் என்றும் கூறுவர்.

வாழ்க்கை முறை

தமிழகத்தில் மிகத் தொன்மையான காலத்தில் இவர்கள் மரப்பொந்துகளில், பாறைக் குகைகளில் பதுங்கி வாழ்ந்தனர். வேட்டையாடவும், பதுங்கி வாழவும் இவர்களுக்கு மலை துணையாக இருந்தது. ஆறுகளும், பாறைச்சுனைகளும் நீர்வளமளித்தன. இவர்கள் ஓரிடத்தில் நிலையாகத் தங்கவில்லை. ஆற்றுப்படுகைகளிலும், மரக்கிளையில் இலை, தழை, விலங்கின் தோல்கள் ஆகியவற்றைத் தொட்டிலாக்க் கட்டி அதில் தூங்கினர்.

நெருப்புப் பயன்பாடு

பழைய கற்காலத் தமிழர்கள் தொடக்கத்தில் நெருப்பின் பயன்பாட்டை அறியவில்லை.  வெயில் காலத்தில் மூங்கில்கள் உராய்ந்து நெருப்புப் பற்றிக் கொண்டது. அதைக்கண்டு அச்சம் கொண்டனர்.  பின்னர் கற்களை உரசுவதன் மூலம் நெருப்பை உருவாக்கக் கற்றுக் கொண்டனர்.  குளிரில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும், விலங்குகளிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்கும், இறைச்சியை வதக்கி உண்பதற்கும், தேனீயை விரட்டித் தேன் எடுக்கவும் நெருப்பைப் பயன்படுத்தினர்.

தொழில்கள்

வேட்டையாடுதல் அவர்களின் முதன்மைத் தொழிலாக  அமைந்தது. காய்கனி பறித்தல், கிழங்கெடுத்தல், தேனெடுத்தல் ஆகியவையும் கற்கால மனிதர்களின் தொழில்களாக இருந்தன.

பொழுதுபோக்கு

தொல்லியல் துறை பல்வேறு இடங்களில்  நடத்திய ஆய்வுகளில், எண்ணற்ற பாறை ஓவியங்களும், குகை ஓவியங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால் ஓவியம் தீட்டுவது இவர்களின் பொழுதுபோக்காக இருந்தமையை அறிய முடிகின்றது.  ஆடு, மாடு, மான், பன்றி, உடும்பு, பாம்பு, மயில், கோழி, கொக்கு, அன்னம் முதலிய விலங்கினங்கள், பறவையினங்களின் உருவங்களே அதிக அளவில் ஓவியங்களாகத் தீட்டினர்.

ஆடைகளும் அணிகலன்களும்

தொடக்கத்தில் ஆடையின்றி வாழ்ந்த மக்கள், வெப்பம் குளிர் முதலிய  இயற்கையில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள முற்பட்டனர். ஆகவே, இலை, தழை, மரப்பட்டை, நார் ஆகிவற்றைக் கொண்டு தங்கள் உடலை மறைத்துக் கொண்டனர். நறுந்தழைகள், மலர்கள்,  பறவைகளின் இறகுகள், வண்ணக்கற்கள் ஆகியவற்றை அணிகலன்களாகப் பயன்படுத்தினர். புலிப்பல் வடிவம் கொண்ட தாலியைச் செய்து கொண்டனர்.

தொடர்பு மொழி

தொல் தமிழர்கள் தங்கள் கருத்துகளை அடுத்தவர்களுக்குத் தெரிவிக்க முதலில் கைகளால் சில சைகைகளைக் காட்டினர். வாயால் சில ஓசைகளை எழுப்பினர். அதன் படிநிலையாக மொழி தோன்றியது. 

நம்பிக்கை

இறைவன் குறித்தோ சமயம் குறித்தோ அவர்கள் அறிந்திருக்கவில்லை. அச்சம் வியப்பு காரணமாக நெருப்பு, கதிரவன், நிலவு போன்றவற்றைத் தெய்வங்களாக வணங்கினர்.

சிறிய கற்காலம்

வேட்டையாடுதல் தொடர்ந்தமையால் விலங்குகளின் எண்ணிக்கைக் குறைந்தது. உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டதால் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறினர். பல இடங்களில் பரவி வாழ்ந்தனர். சிலர் கடற்கரைகளில் தங்கள் வாழ்விடத்தை அமைத்துக் கொண்டனர். சிறிய கற்கருவிகளுடன் நீர்நிலைகளின் அருகில் உணவு சேமிப்பவர்களாகவும், மீன் பிடிப்பவர்களாகவும், ஆடு, மாடுகளை வேட்டையாடக் கூடியவர்களாகவும், அவற்றைப் பழக்கி வளர்க்கக் கூடியவர்களாகவும் வாழ்ந்தனர். இக்காலம் தொல்பழங்காலத்தின் இரண்டாவது கட்டம் ஆகும்.

 

               



TANSCHE - தொல்தமிழர்

 

தொல்தமிழர்

உலகம் கடல் நீரால் சூழப்பட்டதுஉலகின் உள்ளே தங்கிவிட்ட வாயுக்கள் அழுத்தம் தாங்க முடியாமல் வெடித்து எரிமலையாக வெளிவந்ததுஅவற்றினின்று வெளிவந்த குழம்புகள் தண்ணீரால் இறுகி பாறைகளும், மலைகளும், நிலமும் உருவாயினநிலப்பகுதி பல கண்டங்களாகப் பிரிந்து இருக்காமல், ஒரே நிலப்பகுதியாக இருந்ததுஅதனைப் பங்கேயா என்று அழைத்தனர்பங்கேயாவில் உள்ள புதைவடிவ மண் நம் தமிழகத்திலும் காணப்படுகின்றதுஎனவே உலகில் நிலம் தோன்றிய காலத்திலிருந்தே தமிழக நிலப்பகுதி இருந்துள்ளது என்பதை உணரலாம்.

குமரிக்கண்டம்

சில கோடி ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நிலப்பகுதியாக விளங்கிய பங்கேயா இரண்டாக உடைந்ததுஅது வடக்கு தெற்கு என இரண்டு கண்டங்களாகப் பிரிந்ததுவடக்குப் பகுதி “இலாராசியா” என்றும் தெற்குப் பகுதியை “கோண்டுவானா” என்றும் அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.  இந்தக் கோண்டுவானா கண்டம் பிளவுபட்ட பின்னர் பழந்தமிழ்நாடு தனியாகவும்ஏனைய நாடுகள் தனியாகவும் பிரிந்தனஅவ்வாறு பிரிந்த நிலப்பகுதியே இலெமூரியா (குமரிக்கண்டம்என்று அழைக்கப்படுகின்றது. இலெமூர் என்ற பாலுட்டிகள் வாழ்ந்த நிலப்பகுதியாக இருந்தமையால் அதன் பெயரிலேயே இக்கண்டம் அழைக்கப்பட்டது. ஆனால் தமிழர்கள் இதனைக் குமரி என்று அழைத்தனர்குமரி நிலத்தின் தென்பகுதியில் பரவியிருந்த மலைத்தொடரின் பெயர் குமரி மலை என்றும், அந்நிலத்தின் வடபகுதியில் ஓடிய ஆறு குமரி ஆறு என்றும் வழங்கப்பட்டது.

முதல் உயிரினத் தோற்றம்

    குமரிக்கண்டம் உயிர்கள் தோன்றுவதற்குத் தேவையான தட்ப வெப்ப நிலைகளைக் கொண்டிருந்தது. அக்கண்டத்தில் கார்பன் கூட்டுப் பொருட்கள் மிகுதியாக இருந்தமையால் உலகின் முதல் உயிரினமான நீலப் பச்சைப் பாசி தோன்றியது. இவை பல கோடி ஆண்டுகளுக்குப் பின் மாற்றம் அடைந்து நீர்வாழ் செடிகளாக மாறின.  இவை கார்பன் டை ஆக்ஸைடை உள்ளிழுத்து ஆக்சிஜனை வெளிவிடத் தொடங்கின. அதனால் ஓசோன் மண்டலம் உருவானது. இந்த ஓசோன் மண்டலம் புற ஊதாக் கதிர்களிடம் இருந்து உலகைக் காப்பாற்றி பல்வேறு உயிரனங்கள் தோன்றக் காரணமாக அமைந்தது. பிறகு குமரிக்கண்டத்தில் ஊர்வனபறப்பனநடப்பன உள்ளிட்ட உயிர்கள் தோன்றின. டைனோசர் என்ற உயிரினம் தோன்றி அதில் இருந்து பல பறவையினங்கள் தோன்றின. பல கோடி ஆண்டுகளுக்குப் பின்  பின்னர் மாந்தக் குரங்கினம் தோன்றியதுஅவற்றின் பரிணாம வளர்ச்சியே மனிதன் ஆவான் என உயிரியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்

தொல் தமிழர்கள்

முதற்கால மாந்தர்கள் காட்டு விலங்கை ஒத்தவர்களாகவும்நாகரிகம் தெரியாதவர்களாகவும் இருந்தனர்தங்கள் வாழ்க்கைக்கு இயற்கையை நம்பி இருந்தமையால் அவர்களுக்கு ஏற்ற இயற்கைப் பெருவள நாடாக இருந்தது குமரிக் கண்டமே ஆகும்எனவேகுமரிக்கண்டத்தில் வாழ்ந்த முன்னோர்களே முதல் மாந்தர்கள் எனில் தமிழினமே உலகின் முதல் மனித இனம் என்றும்அவர்கள் பேசிய மொழியே முதன் மொழி எனில் தமிழே முதல் மொழி என்றும் அறியமுடிகின்றது.

ஆகவேமுதல் மாந்தனாகிய தொல் தமிழரின் வரலாற்றைக் கால அடிப்படையில் வரலாற்றுக்கு முந்தைய காலம்வரலாற்றுக் காலம் என்று இரு பெரும் பிரிவுகளாகப் பிரிப்பர்.

                                                        I.  வரலாற்றுக்கு முந்தைய காலம்

எழுத்துச் சான்றுகள் தோன்றுவதற்கு முந்தைய காலத்தை வரலாற்றுக்கு முந்தைய காலம் அல்லது தொல் பழங்காலம் என்பர்இக்காலம் புதைபொருள் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டனஅக்காலத்தில் மக்கள் விட்டுச் சென்ற கற்கள்பானை ஓடுகள் மற்றும் உலோகத்தால் ஆன கருவிகள்ஓவியங்கள்எலும்புகள் முதலியவை கிடைத்துள்ளனஅவற்றின் வழியாக வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த மக்களைப் பற்றி அறிய முடிகின்றதுவரலாற்றுக்கு முற்பட்ட காலத்து மக்களுடைய நிற அமைதிதலை வடிவம்முடிஉடல் அமைப்புபண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் நிரதர்கள், முதல்நிலை ஆத்திரேலியர்கள், திராவிடர்கள், ஆரியர்கள்  என்ற இனப்பாகுபாட்டை மக்கள் இன ஆய்வாளர்கள் காட்டியுள்ளனர். இதனடிப்படையில் மக்கள் இன வரலாற்றை மூன்று பிரிவுகளாக வகுத்துள்ளனர்அவை, பழைய கற்காலம், புதிய கற்காலம், பெருங்கற்காலம் எனப்படும் உலோகக்காலம் என்பனவாகும்.

           II.          வரலாற்றுக் காலம்

எழுத்துச் சான்றுகள் தோன்றிய பின்பான காலத்தை வரலாற்றுக் காலம் எனலாம். வரலாற்றை அறிய, புதைபொருள் சான்றுகள், கலைச்சின்னங்கள், சாசனங்களும் பட்டயங்களும், மொழியில் ஆய்வு, இலக்கியம், ஐரோப்பியக் கம்பெனியாரின் ஆவணங்கள், பாதிரிமார் கடிதங்கள், கிழக்கிந்தியக் கம்பெனி ஆவணங்கள் ஆகிய சான்றுகள் உதவுகின்றன. அவற்றின் மூலம் அக்காலத்தில் வாழ்ந்த மக்களினத்தின் வாழ்க்கை முறைசமூக முறைபண்பாடுநாகரிகம்பழக்கவழக்கம்நம்பிக்கைமொழி ஆகியவற்றை அறிய முடிகின்றது.

 

TANSCHE - கல்வியும் கலைகளும்

 

கல்வியும் கலைகளும்

வரலாற்றுக்கு முந்தைய பண்டைத் தமிழர் கல்வி கற்றமைக்கும், கற்பித்தமைக்கும் சான்றுகள் இல்லை என்றாலும், குகையில் வரைந்துள்ள ஓவியங்கள் அவர்களின் பட்டறிவை பறை சாற்றுகின்றன. படிப்படியாக நாகரிக வளர்ச்சி அடைந்த காலத்தில் கல்வியின் பயனை மக்கள் அறிந்து கொண்டனர். பாமர மக்களும் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதற்குக் கீழடி அகழாய்வில் கிடைத்த எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் சான்றுரைக்கின்றன.

திருக்குறளும் கல்வியும்

சங்ககாலத் தமிழர்கள் கல்வியின் சிறப்பை நன்கு அறிந்திருந்தனர். திருக்குறளில் கல்வி குறித்துப் பேசுகின்ற நான்கு அதிகாரங்கள் உள்ளன. கல்வியைக் குற்றமின்றி கற்க வேண்டும். கற்றபடி நடக்க வேண்டும். கல்வி ஒன்று அழியாத செல்வம். கல்வியை விட கேள்வியே மேம்பட்டது. யார் எது கூறினாலும் அதன் உண்மைப் பொருளை அறிவதே நல்லறிவு என்று வலியுறுத்துகின்றார் திருவள்ளுவர்.

சங்க காலத்தில் கல்வி

கல்வி பயிலும் உரிமை தனிப்பட்டவர்களின் உரிமையாக இல்லாமல், எந்தக் குலத்தைச் சார்ந்தவர்களும், செல்வர்களும், மன்னரும், எளிய குடிமக்களும், அவர்களில் ஆண்களும், பெண்களும் கல்வியைத் தேடிப் பயின்றுள்ளனர். திருமணமான பின்பும் இளைஞர்கள் தங்கள் னைவியை விட்டுப் பிரிந்து கல்வி கற்றனர் என்பதை, “ஓதல் பகையே தூது இவை பிரிவேஎன தொல்காப்பியம் கூறுகின்றது. இளமையிலேயே கல்விப் பயிற்சி தொடங்கிடுகின்றது என்பதை “இளமையில் கல்” என்ற தொடர் விளக்குகின்றது. அந்த அளவிற்குக் கல்விக்குச் சிறப்பிடம் கொடுத்துள்ளனர் தமிழர்.

கல்வியில் தந்தையின் கடமை

அறிஞர் அவையின் வரிசையில் அமரச் செய்வதும், சான்றோன் ஆக்குவதும் தந்தையின் கடமை எனப்பட்டது. அதுவே தமிழரின் சிறந்த அறமாகப் போற்றப்பட்டது.

 கல்வி கற்பிக்கப்பட்டதன் நிலை

சாதி, இனம் உள்ளிட்ட எந்த வேறுபாடும் கல்விக்குரிய தகுதியாக இல்லை. ஆசிரியரிடம் அடக்கமாகவும், அன்பாகவும் கல்வி கற்க வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் பள்ளிகள் நடைபெற்றதாகத் தகவல் இல்லை என்றாலும், ஊர்தோறும் மன்றங்களில் நூலகம் அமைக்கப்பட்டு, அங்கு சுவடிகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்றும், ஆசிரியரிடம் சென்று மாணவர்கள் கல்வி கற்றிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

கணக்காயர், குலபதி

கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் கணக்காயர் எனக் கூறப்பட்டனர். கணக்காயர் இல்லாத ஊரும் நன்மை பயத்தல் இல என்று திரிகடுகம் கூறுகின்றது. பதினாயிரம் மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தவர்களுக்குக் குலபதி என்ற பட்டம் கொடுத்துள்ளனர்.

பள்ளிகளும் ஆசிரியர்களும்

கல்வி பயிற்றும் இடம் பள்ளி எனப்பட்டது. ஆசிரியரின் வீடுகளும், திண்ணைகளும், ஊரின் பொது இடங்களும் பள்ளிகளாகச் செயல்பட்டன. மாணவர்கள் ஓலையில் எழுத்தாணி கொண்டு எழுதினர். ஓலைகளைச் சேர்த்துக் கட்டிய சுவடி ஏட்டுச் சுவடி எனப்பட்டது. கல்வி கற்பதற்கு வயது வரம்பு இல்லை.

பல துறைகளில் புலமை சான்ற அறிஞர்கள், போலி ஆசிரியரை வரவழைத்து, அவர்களுடன் சொற்போர் புரிந்து, தோல்வியுறச் செய்து நல்லறிவு புகட்டுவது அக்கால வழக்கமாக இருந்த்து. இதன் மூலம் கல்வியின் தரத்தை நன்கறிந்து கொள்ள முடிகின்றது. அத்தகைய திறமையுள்ள நேர்மையான ஆசிரியர்களிடம், பொருள் கொடுத்தும் தொண்டுகள் புரிந்தும் மக்கள் கல்வி பயின்றனர். ஆசிரியர்கள் மாணவர்களால் நன்கு மதிக்கப்பட்டனர். சமூகத்தில் ஆசிரியர்கள் மிக உயர்வான நிலையில் மதிக்கப்பட்டனர்.

கற்ற பாடங்கள்

மாணவர்கள் தொல்காப்பியம், காக்கைப்பாடினியம் ஆகிய இலக்கண நூல்களைப் பயின்றனர். ஏரம்பம் என்ற கணித நூலைக் கற்றுள்ளனர்எண்ணும் எழுத்தும் அவர்களுடைய பாடங்களாக இருந்தன. எண் என்று கூறப்படுகின்ற கணித அறிவு போற்றத்தக்கதாக இருந்ததது. ஒன்று முதல் கோடி வரை எண்களை அறிந்திருந்தனர். அதோடு எண்ணிலடங்காத பேரெண்களைக் குறிக்க தாமரை, ஆம்பல், வெள்ளம் என்னும் சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர். நாழி, தூணி, காணி, முந்திரி, இம்மி என்னும் அளவுகள் சார்ந்த நீட்டல் அளவை, முகத்தல் அளவை சார்ந்த கணிதம் அறியப்பட்டிருந்தது. மிக நுண்ணிய நீட்டல் அளவைக்கு “தேர்த்துகள்” என்று பெயர். மிகப் பெரிய எண்ணுக்கு “வெள்ளம்” என்பது பெயர். 

வானியல், மருத்தும், இசை, ஓவியம், நாட்டியம், சிற்பம் முதலிய கல்வியும் சிறந்திருந்தன. கோள்கள், அவற்றின் செயல்கள், திங்களின் இயக்கம், விண்மீன்களின் இயக்கம் ஆகிய வானியல் அறிவு பரந்துபட்டு இருந்தது. பூமியில் இருந்து கொண்டே கோள்கள் மற்றும் ஞாயிறு, திங்கள், விண்மீன்கள் ஆகியவற்றை ஆராய்ந்ததால் பூமி நிலையாக இருப்பதாகவும், மற்றவை அனைத்தும் பூமியை மையமிட்டுச் சுற்றி வருவதாகவும் கருதினர். சூரிய கிரகணம், சந்திர கிரகணம் குறித்த அவர்களின் கணிப்புகள் மிகச் சரியாக இருந்தமை வியப்பிற்குரியது. சோதிடம் குறித்த தெளிவு அக்கால மக்களிடையே இருந்துள்ளது. வானவியல் புலவர்கள் “கணிகர்என்று அழைக்கப்பட்டனர்.

கல்வியின் பயன்

கல்வி அறிவை வளர்ப்பதற்கும், ஒழுக்கத்தை வளர்ப்பதற்கும் பயன்பட்டது. செல்வத்தை விட கல்விக்கே உரிய அங்கீகாரம் கொடுக்கப்பட்டது. கல்வி என்பது பண்பாட்டை வளர்க்கின்ற, வீடுபேறு அளிக்கின்ற மருந்து என்றே அம்மக்கள் கருதினர். சாதி வேறுபாட்டைக் களையக் கூடிய கருவி என்றும் கருதினர்.