புறநானூறு
பாடியவர்: ஔவையார்
திணை: பொதுவியல்.
திணை விளக்கம்:
வெட்சி முதல்
பாடாண் வரை உள்ள திணைகளில் கூறப்படாத கருத்துக்களையும், அத்திணைகளுக்குப் பொதுவாக உள்ள
கருத்துகளையும் எடுத்துரைப்பது பொதுவியல் திணையாகும்.
துறை: பொருண்மொழிக்காஞ்சி.
துறை விளக்கம்:
துறவியர்கள்
கற்று உணர்ந்த நன்மையான செய்திகளை எடுத்துக் கூறுவது இத்துறையாகும்.
பாடல்
நாடா கொன்றோ;
காடா கொன்றோ;
அவலா கொன்றோ;
மிசையா கொன்றோ;
எவ்வழி
நல்லவர் ஆடவர்,
அவ்வழி
நல்லை; வாழிய நிலனே!
பாடல் விளக்கம்
- வாழ்வும் தாழ்வும் நிலத்தைப்
பொறுத்தது அன்று.
- அந்த நிலத்தில் வாழ்கின்ற
ஆடவரைப் பொறுத்தது.
- நற்பண்பும் நற்செயலும் உடைய
ஆடவரே நாட்டின் நிலத்திற்கும், புகழுக்கும் வளத்திற்கும் காரணமாவர்.
- தீய நிலமாக இருந்தாலும்,
நற்பண்பு உடையவர்கள் அங்கே வாழ்ந்தால் அத்தீய நிலம் நல்ல நிலம் என்றே கூறப்படும்.
- ஆனால் நல்ல நிலமாகவே இருந்தாலும்
அங்கே தீயவர்கள் வாழ்ந்தால் அந்த நல்ல நிலம் தீய நிலம் என்றே கொள்ளப்படும்.
- இதுவே உலகத்தின் இயற்கை என்று
ஔவையார் கூறுகின்றார்.
அருமை ஐயா
பதிலளிநீக்குமிக்க நன்றி
நீக்கு