நான்மணிக்கடிகை
பாடல்
நிலத்துக்கு
அணியென்ப நெல்லும் கரும்பும்
குளத்துக்கு
அணியென்ப தாமரை பெண்மை
நலத்துக்கு
அணியென்ப நாணம் தனக்கு அணியாம்
தான்செல்
உலகத்து அறம்
விளக்கம்
- பசுமையாகக் காணப்படும் நெல்லும், கரும்பும் வயலுக்கு அழகைத் தருகின்றன.
- நீர் நிறைந்த குளத்திற்குத் தாமரைக் கொடியின் இலையும் மலரும் அழகைத் தருகின்றன.
- பெண்மைக்கு அழகு நாணமுடைமை.
- அதுபோல பிறருக்குச் செய்கின்ற அறச் செயல்கள் ஒரு மனிதனுக்கு அழகைத் தருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக