நாலடியார்
கல்வி
பாடல்
குஞ்சி
யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள்
அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம்
என்னும் நடுவு நிலைமையால்
கல்வி
அழகே அழகு.
விளக்கம்
நம் தலையில் உள்ள முடிகளைச் சீர்ப்படுத்துவதால் வருகின்ற அழகும், கரையிட்ட
(border) ஆடையை அணிவதால் உண்டாகும் அழகும், மஞ்சள் பூசுவதால் உண்டாகின்ற அழகும் உண்மையான
அழகல்ல. அவை யாவும் புறத்தே உள்ள அழகை மட்டுமே வெளிப்படுத்துகின்றன. மாறாக, அறநெறியில்
நடந்து, நடுவுநிலைமையோடு வாழ்கின்றோம் என்ற பெருமிதத்தைத் தருகின்ற கல்வியே உண்மையான
அழகாகும். அது ஒன்றே அகத்தில் அழகைத் தரக் கூடியதாகும்.
நல்லதொரு விளக்கம். மிக்க நன்றி. தமிழுக்கு ஆற்றும் தொண்டில் உள்ளம் தானே மகிழ்ச்சி கொள்கிறது.
பதிலளிநீக்கு