பிற்காலச்
சோழர்காலப் பேரிலக்கியங்கள்
பிற்காலச்
சோழர்காலத்தில் காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், இலக்கணநூல்கள் எனப் பலவகையான நூல்கள்
தோன்றியுள்ளன. ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு
காப்பியங்கள், கம்பராமாயணம், பெரியபுராணம்,
கந்தபுராணம் ஆகிய காப்பியங்களும்,
புராணங்களும், மூவருலா, தக்கயாகப்பரணி,
குலோத்துங்கச் சோழன் பிள்ளைத் தமிழ், கலிங்கத்துப்பரணி,
உள்ளிட்ட சிற்றிலக்கியங்களும், ஔவையாரின் நீதி நூல்களும், முத்தொள்ளாயிரம்
போன்ற இலக்கியங்களும், நம்பியகப்பொருள், யாப்பருங்கலம்,
யாப்பருங்கலக்காரிகை, நன்னூல், வீரசோழியம், தண்டியலங்காரம் ஆகிய இலக்கண நூல்களும்
சோழர்காலப் பெருமையைப் பறைசாற்றுகின்றன.
சோழர்காலத்தின் பேரிலக்கியங்கள் என்று கருதப்படுபவை ஐம்பெருங்காப்பியங்கள்,
ஐஞ்சிறுகாப்பியங்கள், கம்பராமாயணம், பெரியபுராணம் ஆகியனவாகும்.
இந்நூல்களின் சிறப்புகளை ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், கம்பராமாயணம், பெரியபுராணம் என்ற தலைப்புகளில் விளக்கமாகக் காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக