திருவெம்பாவை
மாணிக்கவாசகர்
பாண்டிய
நாட்டில் திருவாதவூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் தெரியவில்லை. ஊர்ப்பெயரால்
திருவாதவூரார் என்று அழைக்கப்படுகிறார். கி.பி.9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அறிவாற்றலில் சிறந்து விளங்கிய இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராகப்
பணி புரிந்தார். அப்போது அம்மன்னனால் தென்னவன் பிரமராயன் என்ற
பட்டமளித்துப் பாராட்டப்பட்டார். மன்னனுக்காகக்
குதிரை வாங்க வேண்டி நிறையப் பொன்னுடன் கீழைக்கரைக்குச் சென்றபோது, வழியில்
திருப்பெருந்துறையில், குருந்த மரத்தடியில் இறைவன்
ஞானாசிரியனாக வெளிப்பட்டு உபதேசம் செய்யும் வாய்ப்பினைப் பெற்றார். கொண்டு வந்த
பொன்னையெல்லாம் இறை பணியில் செலவிட்டார். இதனையறிந்த மன்னன்
இவரைச் சிறையிலிடுமாறு அறிவித்தான். அப்போது இறைவன் தன் அடியவனைக் காப்பாற்ற நரியைப்
பரியாக்கியும், வைகையில் வெள்ளப் பெருக்கினை உண்டாக்கியும்,
பிட்டுக்கு மண் சுமந்தும், பிரம்படிபட்டும்
மாணிக்கவாசகரை ஆட்கொண்டார். இதனால்
மாணிக்கவாசகரின் பெருமையை உணர்ந்த மன்னன் மாணிக்கவாசகரைச் சிறையிலிருந்து
விடுவித்து இறைவனிடம் தஞ்சம் அடைந்தான். அன்று முதல் மாணிக்கவாசகர் முழு
மூச்சுடன் சிவத்தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
நூல்கள்
இவர் பாடிய பாடல்களின் தொகுப்பு திருவாசகம் என்னும் பெயர் பெற்றது. இதன்
கருத்துகள் கற்போரின் உயிரை உருக்கியதால் “திருவாசகத்திற்கு
உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்னும் பழமொழி
வழங்கப்படுவதாயிற்று. ஆண்டாள்
கண்ணனைக் கணவனாக எண்ணிப் பாடியதுபோல், மாணிக்கவாசகர் சிவபெருமானைத் தலைவனாகக் கொண்டு திருவெம்பாவை பாடியுள்ளார். திருவெம்பாவையில்
மனம் பறிகொடுத்த இறைவன் “பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என்று
வேண்டியதற்கிணங்க 400 பாக்களைக் கொண்ட திருக்கோவையார்
பாடினார். திருவாசகமும், திருக்கோவையாரும் பன்னிரு திருமுறைகளுள் எட்டாவது திருமுறையாக வைத்துப் போற்றப்படுகின்றன.
பின்பற்றிய நெறி
இவர்
இறைவனைத் தன் ஞான ஆசிரியனாக எண்ணி வழிபட்டார். ஆகவே, இவர் பின்பற்றிய நெறி சன்மார்க்க நெறி என்று கூறப்படுகிறது. இது ஞான நெறி என்றும் வழங்கப்படும்.
திருவெம்பாவை - விளக்கம்
திருவெம்பாவை
சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு பாடப்பட்டது. பாவை
நோன்பினை அடிப்படையாகக் கொண்டது. கன்னிப்பெண்கள்
ஒருவரை ஒருவர் துயிலெழுப்பி,
அனைவரும் ஒன்று சேர்ந்து நீர்நிலைகளில் நீராடித் தாம் வணங்கும் தெய்வப்
பாவையிடம் தங்களது வாழ்வு நலமாக இருக்க வேண்டும் என்றும், தங்களுக்கு
நல்ல குணமுடைய கணவன் அமைய வேண்டும் என்றும் வேண்டிக் கொள்வதாக அமைவதே திருவெம்பாவை
ஆகும்.
திருவெம்பாவை
இருபது பாடல்களைக் கொண்டது. முதல்
எட்டுப் பாடல்கள் தோழியர் ஒருவர் மற்றொருவரை எழுப்புகின்ற செய்தி இடம்பெறுகிறது. ஒன்பதாவது
பாடல் பெண்களின் வேண்டுதலைக் கூறுகிறது. பத்தாவது
பாடல் இறைவனைப் புகழ்ந்து பாடுகிறது. அடுத்த
இருபது பாடல்கள் பெண்கள் நீராடுகின்ற சூழலை விவரிக்கின்றன. இப்பாடல்கள்
சிறு பெண்களுக்கிடையில் நடைபெறும் உரையாடலாக அமைந்துள்ளது மிகச் சிறப்பு. சிறு
பெண்களின் கேலியும் கிண்டலும் படிப்போர் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
பெயர்க்காரணம்
மாணிக்கவாசகர்
திருவண்ணாமலையைத் தரிசித்தபோது பாடப் பெற்றது திருவெம்பாவை. இப்பாடல்கள் சிவபெருமானுக்குத் திருத்தொண்டு
புரிவதையே வரமாகக் கேட்கிறது. திருவெம்பாவைக்குச்
சிறப்பாக விளங்குவது "எம்பாவாய்" என்னும் தொடர்மொழி. இருபது
பாடல்களிலும் பாட்டின் இறுதியில் வருவதால் அதுவே இந்நூலுக்குப் பெயராக அமைந்தது. "ஏலோர்
எம்பாவாய்" என்ற தொடர், பொருள் ஏதுமில்லாத அசைச்சொல் ஆகும். “பாவை போன்ற
பெண்ணே நீ சிந்திப்பாய்” என்று இதற்குச் சிலர் பொருளுரைக்கின்றனர்.
11
k
Copy to class work note Mam
பதிலளிநீக்கு