ஐஞ்சிறு காப்பியங்கள்
அறம், பொருள்,
இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப் பொருள்களுள்
ஏதேனும் ஒன்று குறைந்தால் அது சிறு காப்பியம் என்று அழைக்கப்படுகிறது.
1.
உதயணகுமார
காவியம்
2.
நாககுமார
காவியம்
3.
யசோதர
காவியம்
4.
சூளாமணி
5.
நீலகேசி
ஆகியவை தமிழின் சிறு காப்பியங்கள் என்று போற்றப்படுகின்றன. இக்காப்பியங்கள் அனைத்தும் சமண மதத்தை வலியுறுத்துகின்றன.
1.
உதயணகுமார
காவியம்
இக்காப்பியத்தின் ஆசிரியர்
கந்தியார் என்னும் சமணப் பெண்துறவி. காலம் கி.பி.15ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்பர். பெருங்கதை காப்பியத்தில்
இடம்பெற்றுள்ள உதயணன் வரலாற்றைக் கூறுகிறது. அதனால் உதயணகுமார
காவியம் என்று பெயர் பெற்றது. இந்நூலில் ஆறு காண்டங்களும்,
369 செய்யுட்களும் அமைந்துள்ளன.
2.
நாககுமார
காவியம்
இக்காப்பியத்திற்கு நாகபஞ்சமி
கதை என்ற வேறு பெயரும் உண்டு. ஆசிரியர்
பெயர் தெரியவில்லை. காலம் கி.பி.16ஆம் நூற்றாண்டு. கதைத் தலைவன் நாககுமாரனைப் பற்றிக் கூறுவதால் நாககுமார காவியம் என்று அழைக்கப்படுகிறது.
இந்நூல் 5 சருக்கங்களையும், 170 பாடல்களையும் கொண்டுள்ளது.
3. யசோதர காவியம்
இந்நூலின் ஆசிரியர் வெண்ணாவலூர் உடையார் வேள். காலம் கி.பி.13ஆம் நூற்றாண்டு. 5 சருக்கங்களையும் 320 பாடல்களையும் கொண்டது.
4.
சூளாமணி
இந்நூலின் ஆசிரியர் தோலாமொழித்தேவர். காலம் கி.பி. 7ஆம் நூற்றாண்டு என்றும் கி.பி.10ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர். 12 சருக்கங்களையும் 2330 பாடல்களையும் கொண்டுள்ளது.
இதன் மூலக்கதை ஆருகத மகாபுராணத்தைத் தழுவியது. பாகவதத்தில் வரும் பலராமன், கண்ணன் போன்று திவிட்டன்,
விசயன் என்ற இரு வடநாட்டு வேந்தர்களின் வரலாற்றினை கூறுகின்றது.
“சிந்தாமணியை விட செப்பமான நடையை உடையது சூளாமணி” என்று கி.வா.ஜகன்னாதன் குறிப்பிடுகின்றார்.
5.
நீலகேசி
இது குண்டலகேசி என்னும்
பௌத்த காப்பியத்திற்கு எதிராக எழுந்த சமண நூல். நீலகேசித் தெருட்டு என்று அழைக்கப்படுகிறது. 10 சருக்கங்களையும்,
894 செய்யுட்களையும் கொண்டுள்ளது. இந்நூலின் ஆசிரியர்
பெயர் தெரியவில்லை. வாமன முனிவர் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக