பாரதியார்
பிறந்த இடம் – எட்டையபுரம், பெற்றோர் – சின்னசாமி, இலக்குமி அம்மாள்
இயற்பெயர் சுப்பிரமணியன் (சுப்பையா)
பிறப்பு – திசம்பர் 11, 1882, இறப்பு – செப்டம்பர் 11, 1921
11 ஆம் வயதிலேயே கவி புனையும் ஆற்றல் பெற்றதால் எட்டயபுர அரச சபையினரால் பாரதி என்ற பட்டம் பெற்றார்.
தமிழ், ஆங்கிலம் இந்தி, சமஸ்கிருதம், வங்காளம் ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்.
சுதேசமித்திரன், இந்தியா, பால பாரதம், சக்கரவர்த்தினி, சூரியாதயம், கர்மயோகி, தர்மம் ஆகிய இதழ்களில் ஆசிரியராகவும், உதவி ஆசிரியராகவும் பணியாற்றியவர்.
கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய முப்பெரும் படைப்புகளை இயற்றியவர்.
தேசிய கீதங்கள், விநாயகர் நான்மணி மாலை, புதிய ஆத்திசூடி, சந்திரிகையின் கதை முதலிய படைப்புகளின் உரிமையாளர்.
கவிஞர், விடுதலை போராட்ட வீரர், இதழியலாளர், சமூக சீர்த்திருத்தவாதி என்ற பன்முக ஆளுமை கொண்டவர். பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்தவர்.
தமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினைவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம் ஆகியவற்றை நினைவு இல்லங்களாகப் போற்றி வருகிறது.
பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.
பாரதிதாசன்
பிறந்த ஊர் பாண்டிச்சேரி. பெற்றோர் கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள்.
பிறப்பு – ஏப்ரல் 29, 1891. இறப்பு – ஏப்ரல் 21, 1964.
இயற்பெயர் கனகசுப்புரத்தினம். சிறப்புப் பெயர் - புரட்சிக் கவிஞர், பாவேந்தர்,
கிறுக்கன், கண்டழுதுவோன், கிண்டல்காரன் எனப் பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.
குயில் என்னும் திங்களிதழை நடத்தி வந்தார்.
கவிஞருடைய படைப்பான பிசிராந்தையார் என்ற நாடக நூலுக்கு 1969இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது.
இசையமுது, அழகின் சிரிப்பு, அமிழ்து எது?, இருண்ட வீடு, எதிர்பாராத முத்தம், குடும்ப விளக்கு, குயில் பாட்டு, சஞ்சீவி பர்வதத்தின் சாரல், பாண்டியன் பரிசு முதலானவை பாரதிதாசன் படைப்புகள்.
விதவைத் திருமணம், கலப்புத் திருமணத்தை ஆதரித்தவர். குழந்தை மணத்தை எதிர்த்தவர். பெண்களின் உரிமைக்காகப் பாடுபட்டவர்.
திராவிட இயக்கத் தலைவர்களுள் திரைத்துறையில் முதன்முதலாக நுழைந்தவர்.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
இயற்பெயர் - விநாயகம், பெற்றோர்: சிவதாணுப்பிள்ளை, ஆதிலட்சுமி, மனைவி - உமையம்மை
பிறப்பு : 27.7.1876, இறப்பு : 26.9.1954
தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றவர்.
தமிழ்க்கவிதை, கல்வெட்டாராய்ச்சி, சமூகச் சீர்திருத்தம், நூற்பதிப்பு, பெண்விடுதலை முதலியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம், ஆசிய ஜோதி, குழந்தைச் செல்வம், கீர்த்தனைகள், மலரும் மாலையும், கதர் பிறந்த கதை, தேவியின் கீர்த்தனங்கள், குழந்தைச் செல்வம், கவிமணியின் உரைமணிகள் முதலியவற்றைப் படைத்துள்ளார்.
எட்வின் ஆர்னால்டின் THE PILGRIMS OF PROGRESS என்ற நூலை ஆசிய ஜோதி எனத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களைத் தழுவியும் தமிழில் எழுதினார். 1922 இல் மனோன்மணீயம் மறுபிறப்பு என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார்.
கம்பராமாயணம், திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார். காந்தளூர்ச் சாலை என்ற ஆய்வு நூலை எழுதியுள்ளார்.
சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் 24.12.1940 இல் கவிமணி என்ற பட்டம் அளித்துச் சிறப்பித்தது.
1952 இல் கவிமணிக்குத் தேரூரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது. 2005 இல் இந்திய அரசு முத்திரை வெளியிட்டுச் சிறப்பித்தது.
நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை
பெற்றோர்: வெங்கடராமன், அம்மணியம்மாள்
பிறப்பு: 19.10.1888, இறப்பு: 24.8.1972
தமிழ்ப் புலமை மட்டுமின்றி ஓவியத்திலும் புலமை பெற்றவராக திகழ்ந்தார்.
தேசபக்திப் பாடல்கள், பிரார்த்தனை, தமிழன் இதயம், காந்தி அஞ்சலி, சங்கொலி, கவிதாஞ்சலி, மலர்ந்த பூக்கள், தமிழ்மணம், தமிழ்த்தேன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், அவனும் அவளும் என்ற கவிதைப் படைப்புகளையும்,
தமிழ்மொழியும் தமிழரசும், இசைத்தமிழ், கவிஞன் குரல், ஆரியராவது திராவிடராவது, பார்ப்பனச் சூழ்ச்சியா, திருக்குறள் – உரை, கம்பன் கவிதை இன்பக் குவியல் முதலிய உரைநடைப் படைப்புகளையும், மலைக்கள்ளன், தாமரைக்கண்ணி, கற்பகவல்லி, மரகதவல்லி, காதல் திருமணம், மாமன் மகள் முதலிய புதினங்களையும் படைத்துள்ளார்.
கண்ணதாசன்
கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. இவர் காரைக்குடியில் உள்ள சிறுகூடல் பட்டி என்ற ஊரில் பிறந்தவர்.
இவரது பெற்றோர் சாத்தப்பன் செட்டியார், விசாலாட்சி ஆச்சி.
ஒரு பத்திரிக்கை ஆசிரியர் பணிக்கு சென்றபோது அவர் வைத்துக் கொண்ட புனைப் பெயர் கண்ணதாசன்.
இவர் புகழ் பெற்ற திரைப்படப் பாடலாசிரியர். சிறந்த கவிஞர்
நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர்.
சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர்.
தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது.
அவர் படைப்புகளுள் சில பின்வருமாறு
கவிதை நூல்கள் – காப்பியங்கள் - ஆட்டனத்தி ஆதிமந்தி, இயேசு காவியம், ஐங்குறுங்காப்பியம்,கல்லக்குடி மகா காவியம், கிழவன் சேதுபதி.
சிற்றிலக்கியங்கள் - அம்பிகை அழகுதரிசனம், ,கிருஷ்ண அந்தாதி கிருஷ்ண கானம், கிருஷ்ண மணிமாலை, ஸ்ரீகிருஷ்ண கவசம்
சமயம் - அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்)
சிறுகதைகள் - ஈழத்துராணி, ஒரு நதியின் கதை, கண்ணதாசன் கதைகள், பேனா நாட்டியம், மனசுக்குத் தூக்கமில்லை,
புதினங்கள் - அரங்கமும் அந்தரங்கமும், ,அதைவிட ரகசியம் ஒரு கவிஞனின் கதை, கடல் கொண்ட தென்னாடு, சேரமான் காதலி (சாகித்ய அகாதெமி விருதுபெற்றது)
பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரனார்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார்.
எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் - விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர்.
இவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பாள். 1959-ஆம் ஆண்டு இவர்களுடைய குழந்தை குமரவேல் பிறந்தது. அதே ஆண்டில் (08.10.1959) இவர் அகால மரணம் அடைந்தார்.
பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை.
1954ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்.
நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்தார்.
தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர் என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டவர்.
இவருக்கு இருந்த நடிப்பாசையின் காரணமாக ‘சக்தி நாடக சபா'வில் இணைந்தார். பின்னர் நடிப்பை விட்டுவிட்டுப் பாடல் எழுதும் கலையைக் கற்றுக்கொண்டார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திருமணம் முடித்து ஐந்து மாதங்களில் தனது 29-வது அகவையில் 1959 அக்டோபர் 8 ஆம் நாள் காலமானார்.
தமிழ்நாடு அரசு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவைப் போற்றும் வகையில் பட்டுக்கோட்டையில் மணிமண்டபம் அமைத்துள்ளது.
இவர் எழுதிய திரைப்படப்பாடல்கள் சில பின்வருமாறு
திருடாதே பாப்பா திருடாதே (திருடாதே 1961), உன்னைக் கண்டு நானாட (கல்யாண பரிசு), செய்யும் தொழிலே தெய்வம் (ஆளுக்கொரு வீடு 1960), தை பொறந்தா வழி பொறக்கும் (கல்யாணிக்கு கல்யாணம் 1959), சின்னப்பயலே...சின்னப்பயலே (அரசிளங்குமரி 1958), தூங்காதே தம்பி தூங்காதே (நாடோடி மன்னன் 1958)
கவிஞர் தமிழ் ஒளி
தென்னாற்காடு மாவட்டத்தில் ஆரூர் என்னும் சிற்றூரில் 21.9.1924 அன்று சின்னையா, செங்கேணி அம்மாள் என்னும் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.
விஜயரங்கம் என்பது தமிழ்ஒளியின் இயற்பெயர். இவர் 24.3.1965 அன்று இயற்கை எய்தினார்.
பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கிக் கவிதைகளைப் படைத்தார்.
கவிதைகள் மட்டுமல்லாது கதைகள், கட்டுரைகள், இலக்கியத் திறனாய்வுகள், மேடை நாடகங்கள், குழந்தைப் பாடல்கள் எனப் பலவும் இயற்றினார்.
தாழ்த்தப்பட்ட மக்களின் இழிநிலை கண்டு அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் சாதி சமய வேறுபாடுகளையும் தனது படைப்புகளில் வெளிப்படுத்தியவர்.
நிலைபெற்ற சிலை, வீராயி, மேதின ரோஜா ஆகிய மூன்று காவியங்களை இயற்றியுள்ளார். ஐந்து சிறுகதைத் தொகுதிகளை எழுதியுள்ளார்.
முன்னணி, புதுமை இலக்கியம், சாட்டை போன்ற இதழ்களில் பணியாற்றியுள்ளார். திரைப்படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார்.
சக்தி நாடக சபாவிற்காகச் சிற்பியின் காதல் என்னும் நாடகம் எழுதினார். அது 'வணங்காமுடி’ என்னும் பெயரில் திரைப்படமாக உருவாகியது.
முடியரசன்
- தமிழ்நாட்டின் மூத்த தலைமுறைக் கவிஞர்களுள் ஒருவர்.
- இயற்பெயர்: துரைராசு,
- தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சுப்பராயலு - சீதாலக்ஷ்மி ஆகியோருக்கு, அக்டோபர் 7, 1920-இல் பிறந்தவர்.
- துரைராசு என்ற தன் பெயரை முடியரசன் என்று மாற்றிக் கொண்டார்.
- பாரதிதாசனோடு மிக நெருங்கிப் பழகி அவருடைய முற்போக்கு எண்ணங்களை ஏற்றுப்
பாடியவர்.
- தந்தை பெரியார், அண்ணா ஆகியோரின் பெருமதிப்பைப் பெற்றவர்.
- சாதி-சமய,
சாத்திரச் சடங்குகளை வெறுத்தவர்.
- இவரது
மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம் என்று வலியுறுத்தி அவ்வாறே நிறைவேறச் செய்தவர்.
- சென்னை, முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியிலும், காரைக்குடி மீ. சு.
உயர்நிலைப்பள்ளியிலும் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர்.
- இவரது கவிதைகளைச் சாகித்திய அகாதமி
இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.
சிறப்புகள்
- 'திராவிட நாட்டின் வானம்பாடி' பட்டம் - பேரறிஞர் அண்ணாவால் வழங்கப்பட்டது.
- பற ம்பு மலையில் நடந்த விழாவில் குன்றக்குடி அடிகளாரால் “கவியரசு” என்ற பட்டமம்,
பொற்பதக்கமும் பெற்றவர்.
- தமிழக அரசால் கலைமாமணி விருது பெற்றவர்
- இவருடைய படைப்புகள் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
படைப்புகள்
- காப்பியங்கள்
- பூங்கொடி, வீரகாவியம், ஊன்றுகோல்
- கவிதைகள்
- முடியரசன் படைப்புகள், காவியப்பாவை, நெஞ்சு பொறுக்கவில்லையே, தமிழ் முழக்கம், நெஞ்சிற்
பூத்தவை, ஞாயிறும் திங்களும், பதியதொரு விதி செய்வுாம், தாய்மொழி காப்போம்
- கட்டுரைகள் - எப்படி வளரும் தமிழ், பாடுங்குயில்கள்
- சிறுகதை - எக்கோவின் காதல்
- தன் வரலாறு - பாட்டுப்பறவையின் வாழ்க்கைப் பயணம்
நன்றி - விக்கிபீடியா.
மிக்க நன்று.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குVery useful to study
பதிலளிநீக்கு