சொற்கள் (WORDS)
சொல் - விளக்கம்
ஓர்
எழுத்து தனித்து நின்றோ, பல எழுத்துகள் சேர்ந்து நின்றோ ஒரு பொருளைத் தந்தால் அது சொல்
எனப்படும்.
சான்று
(Example)
கை
– தனியாக நின்று உடல் உறுப்பு என்ற பொருளைத் தருகின்றது.
அம்மா
– பல எழுத்துகள் சேர்ந்து நின்று அன்னை என்ற பொருளைத் தருகின்றது.
[
A word is a letter or combination of letters that have meaning. When a letter
of combination does not give meaning, then it is not a word]
ஓரெழுத்து ஒரு மொழி
ஓர்
எழுத்து மட்டும் தனியான நின்று பொருள் தரும் சிறப்பு தமிழ் மொழியில் மட்டுமே உண்டு.
இதற்கு “ஓரெழுத்து ஒரு மொழி” என்று பெயர்.
[ There are lot of one letter words in tamil.
For example: பூ (flower), கை (hand) are letters that have meaning to
them.]
சான்று (Example)
எழுத்து |
பொருள் |
ஆ |
பசு (cow) |
ஈ |
ஓர் உயிரினம் (house fly) |
கா |
சோலை (park) |
மா |
விலங்கு (animal) |
தீ |
நெருப்பு (fire) |
வீ |
மலர் (flower) |
பூ |
மலர் (flower) |
கோ |
மன்னன் (king) |
கை |
ஓர் உறுப்பு (hand) |
தை |
மாதத்தின் பெயர் (month) |
சொல் வகைகள் – KINDS OF WORDS
சொல் நான்கு வகைப்படும்.
அவை,
1.
பெயர்ச்சொல் (Noun)
2.
வினைச்சொல் (Verb)
3.
இடைச்சொல் (Conjuction)
4.
உரிச்சொல் (Adjective)
என்பனவாகும். [Depending
upon their useage in the sentences the words are catagorised as Peyar chol, Vinai
chol, Idai chol, Urichol.]
1.பெயர்ச்சொல் (NOUN)
ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் பெயர்ச்சொல்
ஆகும். இது பொருள் (things), இடம் (place), காலம் (time), சினை (part of the body),
குணம் (character), தொழில் (activities) என்பனவற்றின் அடிப்படையில் தோன்றும். எனவே,
இவற்றை பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், பண்புப்பெயர், தொழிற்பெயர்
என்று அழைப்பர்.
(There
are six types of tamil nouns. They are nouns that refer to names, places, time,
body parts, describing characters, indication of some kind of action.)
சான்று
1.
பொருட் பெயர் - மனிதன் (man), புத்தகம்
(book), பசு (cow)
2.
இடப்பெயர் - சென்னை (Chennai), மதுரை (Madurai), இந்தியா (India)
3.
காலப்பெயர் - மணி (Time), நாள் (day), மாதம் (month)
4.
சினைப்பெயர் - கண் (Eye), கை(hand), கிளை
(branch)
5.
பண்புப்பெயர் - இனிமை (sweet), நீளம்
(length), சிறியது(small)
6.
தொழிற்பெயர் - படித்தல் (reading), உண்ணல்
(eating), உறங்கல் (sleeping)
பெயர்ச்சொல்
திணை, பால், எண், இடம், வேற்றுமை ஆகியவற்றைத் தெரிவிப்பதாகவும் அமையும். [ Noun is
a word that helps a name or a person. Nouns have five parts of them. They are Thinai
(class), Paal (gender), Enn (count), Idam (place), Vetturumai (difference).]
திணை (CLASS)
திணை என்பது ஒழுக்கத்தைக்
குறிக்கும். இது,
1.
உயர்திணை (Upper class)
2.
அஃறிணை (Inferior class)
என இருவகைப்படும்.
உயர்திணை
ஆறறிவு
படைத்த மக்கள், தேவர்கள், கடவுள்கள் உயர்திணைகளாவர். (Humans are known as Uyarthinai.
Supernatural living beings like gods, demons are also considered as Uyarthinai)
சான்று
மக்கள் - கீதா, கண்ணன்
தேவர் - இந்திரன்
கடவுள் - முருகன், இயேசு, அல்லா
அஃறிணை
உயர்திணை
அல்லாத உயிருள்ள பொருள்கள், உயிரற்ற பொருள்கள் அஃறிணைகளாவர். (Dead, non-viable and
all living beings except humans are known as Ahrinai)
சான்று
பசு, பாம்பு – அஃறிணை
உயிர்ப்பொருள்
மலை, ஆறு – அஃறிணை உயிரற்ற
பொருள்
பால் (GENDER)
பால் என்பது பகுப்பு
அல்லது பிரிவு எனப்படும். இது
1.
ஆண்பால்
2.
பெண்பால்
3.
பலர்பால்
4.
ஒன்றன்பால்
5.
பலவின்பால்
என ஐந்து வகைப்படும்.
இவற்றுள் ,
ஆண்பால்,
பெண்பால், பலர்பால் – உயர்திணைக்கு உரியவை
ஒன்றன்பால்,
பலவின்பால் – அஃறிணைக்கு உரியவை.
ஆண்பால்
(Aan paal) (male)
ஆண்
ஒருவனைக் குறிப்பது.
சான்று
- சங்கர், கார்த்திக்
பெண்பால் (Pen paal) (female)
பெண்
ஒருத்தியைக் குறிப்பது.
சான்று
- கீதா, கவிதா
பலர்பால்
(Palar paal)
ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களைக்குறிப்பது.
சான்று
– மக்கள், மாணவிகள்
ஒன்றன்பால்
(Onran paal)
அஃறிணையில்
ஒன்றைத் தனியாகக் குறிப்பது.
சான்று
– புலி, மயில்
பலவின்பால்
(Palavin paal)
அஃறிணையில்
ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது.
சான்று
புலிகள், மயில்கள்.
[The
nouns also can be categorized as gender nouns (paal). The male gender is called
Aanpaal. The female gender is called Penpaal.
When you catagorise the nouns on gender we have to remember the role of
respect. When giving respect the verb endings will take plural form. It is
called Palar paal. Singular for the inferior class – one thing – it is called
onran paal. Plural for the inferioe class – more than one things – it is called
palavin paal]
எண் (count)
பொருட்களின்
எண்ணிக்கையைத் தெரிவிப்பது எண் எனப்படும். இது ஒருமை, பன்மை என இருவகைப்படும்.
ஒருமை (Singular)
உணர்திணையிலோ,
அஃறிணையிலோ ஒரு பொருளைக் குறிக்க வரும் பெயர் ஒருமை எனப்படும்.
சான்று
–
நான், அவன், இது, குயில், கல்
பன்மை
(Plural)
உணர்திணையிலோ,
அஃறிணையிலோ ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களைக் குறிக் வரும் பெயர் பன்மை எனப்படும்.
சான்று – நாம், அவர், இவை, குயில்கள், கற்கள்
மூவிடம்
மனிதன்
தான் நினைத்ததைத் தானாகவே பேசிக் கொள்வது உண்டு. தன் கருத்தை மற்றொருவனுக்கு எடுத்துக்
கூறி இருவராகக் கலந்து பேசுவது உண்டு. இந்த இருவரிடத்து சொல் பிறப்பதால் அதை இடம் என்று
குறித்தனர். இடம் மூன்று வகைப்படும். அவை, தன்மை, முன்னிலை, படர்க்கை.
தன்மை
(First person)
சொல்பவன்
பெறும் இடம் தன்மை ஆகும்
சான்று
- நான்
முன்னிலை
(Second person)
முன்
நின்று கேட்பவன் பெறும் இடம் முன்னிலை ஆகும்.
சான்று - நீ
படர்க்கை (Third
person)
பேசுபவன், கேட்பவன் இவ்விருவரையும்
அல்லாது மற்றறொருவர் பெறும் இடம் படர்க்கை ஆகும்.
சான்று – அவன்
சான்று
(EXAMPLE)
நான்
கீதாவிற்குப் புத்தகம் கொடுத்ததை நீ பார்த்தாய்
இத்தொடரில், நான்
என்பது தன்மை. நீ என்பது முன்னிலை. கீதா என்பது படர்க்கை
2.வினைச்சொல்
ஒரு
பொருளின் தொழில் நிகழ்ச்சியைக் காட்டும் சொல்லுக்கு வினைச்சொல் என்று பெயர். வினைச்சொல்
இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்னும் மூன்று காலத்தை ஏற்று திணை, பால், எண்,
இடம் ஆகியவற்றைத் தெரிவிக்கும்.
சான்று
நடந்தான்
இதில்,
காலம் – இறந்தகாலம்
திணை – உயர்திணை
பால் – ஆண்பால்
எண் – ஒருமை
இடம் – தன்மை.
வினைச்
சொல் வினைமுற்று, வினையெச்சம், பெயரெச்சம் என மூன்று வகைப்படும்.
வினைமுற்று
(complete action word)
பெயர்ச்சொல்லுக்குத்
துணையாக நின்று வாக்கியத்தின் பொருளை முடித்துகு் காட்ட வருவது வினை முற்றாகும்.
சான்று
– அவள் ஓடினாள் (she ran)
வினையெச்சம்
( incompleated action ending with verb)
ஒரு
வினையெச்சம் முற்றிலும் பொருள் தருவதற்காக ஒரு வினைமுற்றைத் தழுவி வரும். அதற்கு வினையெச்சம்
என்று பெயர். இதனுடைய வினை (செயல்) முடிவு பெறாமல் நிற்கும். ஆனால் காலம் காட்டும்.
சான்று – நான்
படித்து முடித்தேன் (I finished reading)
பெயரெச்சம்
(incompleate action ending with noun)
ஒரு வினைச் சொல் முற்றிலும் பொருள் தருவதற்காகப்
பெயர்ச்சொல்லைலத் தழுவி நிற்கும். இதற்குப் பெயரச்சம் என்று பெயர். இதில் காலம் தோன்றும்.
பால் தோன்றாது.
சான்று
– நான் படித்த பள்ளி
[Verb are action words, they
will also show the tense. Tenses are three types: Past tense (Irantha kaalam),
Present tense (Nigazh kaalam), Future tense (Ethir kaalam). Tenses are expressed in verb. When the word explains
a completed action it is called vinai muttru. Vinai echam means an Incompleate
action. When echa vinai ia completed with noun it is peyarechem. Vinai echem
describes an incomleate action being completed with an action.]
3.
இடைச்சொல்
(conjuction)
பெயர்ச்சொல்லுக்கும்,
வினைச்சொல்லுக்கும் முன்னும், பின்னும், இடையிலும்
நின்று பொருளை விளக்கும் சொல் இடைச்சொல் எனப்படும்.
வேற்றுமை
உருபுகள்
காலம்
காட்டும் இடைநிலைகள்
சாரியைகள்
வினா
எழுத்துகள்
சுட்டு
எழுத்துகள்
உவமை
உருபுகள்
அசைச்சொற்கள்
முதலியன இடைச்சொல் என
வழங்கப்படுகின்றது.
சான்று
அவளோ
வந்தாள்? ( அவள் + ஓ)
இதில் அவள் என்ற பெயர்ச்சொல்லோடு
ஓ என்ற அசைச்சொல் சேர்ந்து வினாப் பொருளை உணர்த்துகின்றது.
[
when words are combined to make a sentence in English we use propositions.
Likewise in tamil we use what we call vetturumai urubugal. These letters are
called idaichol. They are also considered as one type of nouns. They can also
act as particles]
4.
உரிச்சொல் (Adverb
and Adjective)
தனித்து
இயங்கும் ஆற்றல் இன்றி பெயர்சொல்லையோ, வினைச் சொல்லையோ அடுத்து நின்று அவற்றின் குணத்தை
உணர்த்தும் உரிமை உடையனவாக வரும் சொல் உரிச்சொல் எனப்படும். இது பொருளின் தன்மையை மிகுதிப்படுத்தும்.
இது, ஒரு பொருள் குறித்த பல உரிச்சொல், பல பொருள் குறித்த ஓர் உரிச்சொல் என இருவகைப்படும்.
ஒரு
பொருள் குறித்த பல உரிச்சொல் (Polysyllabic)
சால,
தவ, உறு, நனி, கழி, கூர் என்னும் உரிச்சொற்கள் ஆறும் மிகுதி என்ற ஒரே பொருளை உணர்த்துகின்றன.
சான்று
உறு
பொருள் – மிகுதியான பொருள்
நனி
நன்று – மிக நன்று
பல
பொருள் குறித்த ஓர் உரிச்சொல் (A word for many things)
கடி
என்ற ஓர் உரிச்சொல் காவல், கூர்மை, நறுமணம், விளக்கம், அச்சம், விரைவு, மிகுதி, புதமை,
ஒலித்தல், நீத்தல், திருமணம், காரம் என்ற 13 பொருள்களைத் தருகின்றன.
சான்று
கடி
நகர் - காவல் நகர்
கடி
மிளகு - காரமான மிளகு
[Adjective is
a word that means one to one. A word assumes the status of an adjective when it
stands for multiple meanings, and when multiple words claim ownership of an
object. It can be a noun, a verb, an adjective for a noun, an adjective
for a verb, or a noun for a noun in general. The adjective can be of two types
Polysyllabic, A word for many things]
Name: BHAVATHARANI.K.S
பதிலளிநீக்குDEPT: BCOM GENERAL 'A' SEC
Name - Janani. G
பதிலளிநீக்குDept - B.Com bank management
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு