நாலடியார்
ஈகை
1.இல்லா
இடத்தும் இயைந்த அளவினால்
உள்ளஇடம்
போல் பெரிதுவந்து - மெல்லக்
கொடையொடு
பட்ட குணனுடைய மாந்தர்க்கு
அடையாவாம்
ஆண்டைக் கதவு.
விளக்கம்
தம்மிடம்
பொருள் இல்லாதபோதும், பொருள் உள்ளதுபோலவே மகிழ்ந்து, பிறருக்குக் கொடுத்து வாழும் நற்குணமுள்ள
மக்களுக்கு மறுமை உலகக் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.
2.முன்னரே
சாம்நாள் முனிதக்க மூப்புள
பின்னரும்
பீடழிக்கும் நோயுள; - கொன்னே
பரவன்மின்
பற்றன்மின் பாத்துண்மின் யாதும்
கரவன்மின்
கைத்துண்டாம் போழ்து.
விளக்கம்
நம்
கண்முன்னே நாம் இறக்கும் நாளும், முதுமைப் பருவமும், வலிமையை அழிக்கும் நோய்களும் இருக்கின்றன.
ஆதலால் பொருள் உள்ள காலத்தில் மேலும் அதனைச் சேர்க்க நாற்புறமும் ஓடி அலையாமல், இருக்கின்ற
பொருளைப் பலருக்கும் பகுத்துக் கொடுத்து வாழ வேண்டும்.
3.நடுக்குற்றுத்
தற்சேர்ந்தார் துன்பம் துடையார்;
கொடுத்துத்தான்
துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்;
இடுக்குற்றுப்
பற்றினும் நில்லாது செல்வம்
விடுக்கும்
வினையுலந்தக் கால்.
விளக்கம்
செல்வம்
சேர வேண்டிய காலத்தில் மென்மேலும் சேரும். நல்வினை தொலைந்து போனால், அச்செல்வத்தை இறுகப்
பிடித்தாலும் நீங்கிப் போய் விடும். இதை உணர்ந்து, செல்வம் இல்லாமல் துன்புறுவோருக்கு
மகிழ்ச்சியோடு கொடுத்து வாழ்வதே சிறந்தது.
4.இம்மி
யரிசித் துணையானும் வைகலும்
நும்மில்
இயைவ கொடுத்துண்மின் - உம்மைக்
கொடாஅ
தவரென்பர் குண்டுநீர் வையத்து
அடாஅ
அடுப்பி னவர்.
விளக்கம்
ஆழமான நீராகிய கடலால் சூழப்பட்ட உலகில் சமைக்க அரிசி இல்லாத அடுப்பினை
உடையவர்களும் வாழ்கின்றனர். அவர்கள் நம்மைக் ’கொடாதவர்’ எனப் பட்டம் சூட்டிப் பழிக்காமல் இருக்க
வேண்டும். எனவே இம்மி அளவு அரிசியாக இருப்பினும் நம்மால் முடிந்த அளவு நாள்தோறும்
அவர்கள் சமைத்துண்ணக் கொடுத்து உதவ வேண்டும்.
5.மறுமையும்
இம்மையும் நோக்கி ஒருவற்கு
உறுமா
றியைவ கொடுத்தல் - வறுமையால்
ஈதல்
இசையா தெனினும் இரவாமை
ஈதல்
இரட்டி யுறும்.
விளக்கம்
இம்மை, மறுமைப் பயன்களைச் சிந்தித்தேனும்
பிறருக்குக் கொடுத்து வாழவேண்டும். வறுமையால் தன்னால் ஏதும் கொடுக்க முடியாமல் போனால் அடுத்தவரிடம் எதுவும் எதிர்பார்த்துக் கேட்காமலாவது
இருக்க வேண்டும். இரவாமை கொடுப்பதை
விட இரண்டு மடங்கு மேலானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக