பரிபாடல்
செவ்வேள் – கடுவன் இளவெயினனார்
பாய் இரும்
பனிக் கடல் பார் துகள் படப் புக்கு,
சேய் உயர்
பிணிமுகம் ஊர்ந்து, அமர் உழக்கி,
தீ அழல்
துவைப்பத் திரிய விட்டெறிந்து,
நோயுடை
நுடங்கு சூர் மா முதல் தடிந்து,
வென்றியின்
மக்களுள் ஒருமையொடு பெயரிய
கொன்று
உணல் அஞ்சாக் கொடு வினைக் கொல் தகை
மாய அவுணர்
மருங்கு அறத் தபுத்த வேல்,
நாவல்அம்
தண் பொழில் வட பொழில் ஆயிடை,
குருகொடு
பெயர் பெற்ற மால் வரை உடைத்து,
மலை ஆற்றுப்
படுத்த மூ-இரு கயந்தலை!
பாடல்
விளக்கம்
சூரபத்மனை அழிப்பதற்காக முருகப் பெருமான் பிணிமுகம் என்ற யானையின் மீதேறிப்
போருக்குச் சென்றான். போரில் அவன் எறிந்த வேல் கடலில் புகுந்து கடற் பாறைகளைத் தூள்
தூளாக்கியது. கடலை வற்றச் செய்தது. அவ்வேல் தான் சென்ற
வேகத்தில் தீயையும் ஒலியையும் எழுப்பியது. தேவர்கள் முதலாக அனைவருக்கும் துன்பம்
கொடுத்து வந்த, கடலின் நடுவே மாமரமாகி நின்ற சூரபத்மனை வேருடன் வெட்டி வீழ்த்தியது.
வெற்றி அவருடையானது. அதனால், புண்ணியம் செய்தவர், பாவம் செய்தவர் என்னும் இருவகையினரில்
புண்ணியம் செய்தவர் என்ற பெயரைப் பெயரளவில் மட்டுமே பெற்று, பிற உயிரினங்களைக் கொன்று
உண்பதையே வழக்கமாகக் கொண்டு, மாயம் செய்வதில் வல்லவர்களான அவுணர்களின் குலத்தை அவ்வேல்
அழித்தது. அவ்வேல் நாவலந்தீவின் வடபகுதியில் உள்ள கிரெளஞ்சம் என்ற பறவையின் பெயரைப்
பெற்ற மலையினைத் துளைத்து வழியே உண்டாக்கியது. அத்தகைய சிறப்புடைய வேலினைக் கையில்
ஏந்திய வீரன் முருகப்பெருமான் ஆவான்.
மரமாகி நின்ற சூரபன்மாவை அழிக்கும் முருகன் |
Shalini J
பதிலளிநீக்குB.A.TTM
completed maam
Priya.v
பதிலளிநீக்குB.A TTM
Completed mam
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குNandhini.A
பதிலளிநீக்குB.com General
Very usefu nd very efficient for reading,explained clearly.Good.
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குS.lokesh raj
பதிலளிநீக்குB.com (g)
nice to read this story
பதிலளிநீக்குLIBIKA N (BCA) finished mam
பதிலளிநீக்கு