வெள்ளி, 21 மார்ச், 2025

ஐந்திணைப் பகுப்பும் சூழலியலும்

 

ஐந்திணைப் பகுப்பும் சூழலியலும்

இயற்கையோடு இயைந்து வாழ்ந்து தாங்கள் வாழ்ந்த நிலத்தின் சூழலியலைப் பாதுகாத்தவர்கள் தமிழர்கள். நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகையாகப் பகுத்து, அவற்றுக்கு முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் வகுத்து உலகுக்கு நாகரிகத்தையும் பண்பாட்டையும் கற்றுத் தந்தவர்கள். இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமன்று. உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களுக்குமானது என்பதை இவர்தம் ஐந்திணைப் பகுப்பு காட்டுகின்றது.

முதற்பொருள்

நிலமும் பொழுதும் முதற்பொருள் எனப்படும்.

நிலம்

திணை

நிலம்

குறிஞ்சி

மலை மலை சார்ந்த இடம்

முல்லை

காடு காடு சார்ந்த இடம்

மருதம்

வயல் வயல் சார்ந்த இடம்

நெய்தல்

கடல் கடல் சார்ந்த இடம்

பாலை

மலையும் காடும் தன் இயல்பில் மாற்றம் பெற்ற இடம்

 பொழுது

பொழுது என்பது சிறுபொழுது, பெரும்பொழுது என இருவகைப்படும். சிறுபொழுது என்பது ஒரு நாளின் ஆறு பிரிவுகளைக் காட்டும். பெரும்பொழுது என்பது ஓர் ஆண்டின் ஆறு பகுதிகளைக் காட்டும்.

சிறுபொழுது

காலை

காலை 6 மணி முதல் காலை 10 மணிவரை

நண்பகல்

காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

எற்பாடு

பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை

மாலை

மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை

யாமம்

இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை

வைகறை

இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை

 பெரும்பொழுது

கார் காலம்

ஆவணி, புரட்டாசி

குளிர்காலம்

ஐப்பசி, கார்த்திகை

முன்பனிக்காலம்

மார்கழி, தை

பின்பனிக்காலம்

மாசி, பங்குனி

இளவேனில் காலம்

சித்திரை, வைகாசி

முதுவேனில் காலம்

ஆனி, ஆடி

ஐந்திணைக்குரிய பொழுதுகள்

திணை

சிறுபொழுது

பெரும் பொழுது

குறிஞ்சி

யாமம்

கூதிர் காலம், முன்பனிக்காலம்

முல்லை

மாலை

கார்காலம்

மருதம்

வைகறை, விடியல்

கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்

நெய்தல்

வைகறை, எற்பாடு

கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்

பாலை

நண்பகல்

இளவேனில் காலம், முதுவேனில் காலம்

 கருப்பொருளும் சூழலியலும்

நிலத்தின் தன்மைக்கேற்ப அங்கே வாழ்கின்ற உயிரினங்களைப் பகுத்துள்ளனர் தமிழர்கள். அவை பின்வருமாறு

குறிஞ்சி

மலையும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி என்று அழைக்கப்படுகின்றன. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கின்ற குறிஞ்சிப் பூ மலைப்பகுதிகளில்தான் காணப்படும். அதனால் இந்நிலத்திற்கு இப்பெயரிட்டனர் என்று அறியலாம். மேற்குத் தொடர்ச்சி மலைகள், கிழக்குத் தொடர்ச்சி மலைகள், ஆனைமலை முதலிய பகுதிகளைத் தமிழகத்தின் குறிஞ்சி நிலப்பகுதியாகக் கொள்ளலாம். புணர்தலும் புணர்தல் நிமித்தமும் இந்நிலப்பகுதியின் உரிப்பொருளாகும். இதன் கருப்பொருள் பின்வருமாறு.

தெய்வம்

முருகன்

குடிமக்கள்

குறவர், குறத்தியர்

மரங்கள்

தேக்கு, அகில், சந்தனம், மூங்கில், வேங்கை

விலங்குகள்

கரடி, புலி, யானை, குரங்கு, பன்றி

பறவை

கிளி, மயில்

பறை

தொண்டகம், வெறியாட்டு

பண்

குறிஞ்சிப்பண்

யாழ்

குறிஞ்சி யாழ்

மலர்கள்

குறிஞ்சி, காந்தள், வேங்கை

தொழில்

கிழங்கு அகழ்தல், தேன் எடுத்தல், வெறியாடல்

நீர்நிலை

அருவி, சுனை

உணவு

தினை, மலைநெல், மூங்கிலரிசி

ஊர்

சிறுகுடி

 முல்லை

காடும் காடு சார்ந்த இடங்களும் முல்லை என்று அழைக்கப்பட்டன. இந்நிலம் செம்மண்ணால் பரந்திருந்தமையால் செம்புலம் என்றும் அழைக்கப்பட்டது. முல்லை மலரைத் தழுவி இத்திணைக்கு முல்லை என்று பெயரிடப்பட்டது. இருத்தலும் இருத்தல் நிமித்தமும் இதன் உரிப்பொருளாகும். கருப்பொருள் பின்வருமாறு.

தெய்வம்

திருமால்

குடிமக்கள்

ஆயர், ஆய்ச்சியர், இடையர், இடைச்சியர்

மரங்கள்

கொன்றை, காயா

விலங்குகள்

முயல், மான், புலி

பறவை

காட்டுக்கோழி, மயில்

பறை

ஏறுகோட்பறை

பண்

முல்லைப்பண்

யாழ்

முல்லை யாழ்

மலர்கள்

முல்லை, தோன்றி

தொழில்

ஏறு தழுவுதல், ஆநிரை மேய்த்தல்

நீர்நிலை

காட்டாறு

உணவு

வரகு, சாமை

ஊர்

பாடி, சேரி

 மருதம்

வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் எனப்பட்டது. தஞ்சை, நாகப்பட்டினம், மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, மயிலாடுதுறை, கடலூர், திருநெல்வேலி முதலான மாவட்டங்களின் பல பகுதிகள் மருத நிலத்தைச் சார்ந்தவை. ஊடலும் ஊடல் நிமித்தமும் இதன் உரிப்பொருள் ஆகும். கருப்பொருள் பின்வருமாறு.

தெய்வம்

இந்திரன்

குடிமக்கள்

உழவர், உழத்தியர்

மரங்கள்

காஞ்சி, மருதம்

விலங்குகள்

எருமை, நீர் நாய், பசு, காளை, ஆடு

பறவை

கொக்கு, நாரை, குருகு, வாத்து, அன்றில்

பறை

நெல்லரி

பண்

மருதப்பண்

யாழ்

மருத யாழ்

மலர்கள்

தாமரை, கழுநீர், குவளை, அல்லி

தொழில்

களை பறித்தல், நாற்று நடுதல், நெல்லரித்தல்

நீர்நிலை

பொய்கை, ஆறு, ஏரி, குளம்

உணவு

செந்நெல், வெண்ணெல்

ஊர்

பேரூர், மூதூர்

 நெய்தல்

கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் ஆகும். புகார், நாகப்பட்டினம், அரிக்கமேடு முதலிய இடங்கள் நெய்தல் நிலத்தைச் சார்ந்தவை. இரங்கலும் இரங்கல் நிமித்தமும் இதன் உரிப்பொருள். கருப்பொருள் பின்வருமாறு.

தெய்வம்

வருணன்

குடிமக்கள்

பரதர், பரத்தியர்

மரங்கள்

புன்னை, ஞாழல்

விலங்குகள்

சுறா, முதலை

பறவை

கடற்காகம், நீர்ப்பறவை

பறை

மீன்போட்பறை

பண்

செவ்வழிப்பண்

யாழ்

விளரியாழ்

மலர்கள்

நெய்தல், தாழை

தொழில்

மீன் பிடித்தல், உப்பு விற்றல்

நீர்நிலை

கேணி, கடல்

உணவு

மீன், உப்புக்கு விற்ற பொருள்கள்

ஊர்

பாக்கம், பட்டினம்

 பாலை

காடும், மலையும் மழையின்றி வறட்சி அடையும்போது பாலை என்ற நிலையை அடைகின்றன. பிரிதலும் பிரிதல் நிமித்தமும் இதன் உரிப்பொருள். கருப்பொருள் பின்வருமாறு

தெய்வம்

கொற்றவை

குடிமக்கள்

எயினர், எயிற்றியர்

மரங்கள்

இலுப்பை, ஓமை

விலங்குகள்

செந்நாய், இளைத்த யானை

பறவை

கழுகு, பருந்து

பறை

துடி

பண்

பஞ்சுரப்பண்

யாழ்

பாலை யாழ்

மலர்கள்

பாதிரி, மரா, குரா

தொழில்

வழிப்பறி செய்தல்

நீர்நிலை

நீர் வற்றிய கிணறு

உணவு

வழிப்பறி செய்த பொருள்கள்

ஊர்

குறும்பூர்

 முடிவுரை

இவ்வாறு நிலத்தின் தட்ப வெப்ப நிலைக்கேற்பவும், இயற்கையைப் புரிந்து கொண்டும் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் தமிழர்கள். இயற்கையைப் பாதுகாப்பதே அவர்களின் தலையாய பணியாக இருந்தது என்பதை இதன்வழி அறியலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக